பாட்னாவில் நடைபெற்ற ஜனதா தள இளைஞர் மாநாட்டில் நீத்திஷ் குமார் கலந்து கொண்டபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.
Patna: பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று நிகழ்ந்த ஜனதா தள இளைஞர் மாநாட்டில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். அப்போது, அவர் மீது செருப்பை தூக்கி வீசியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை செய்ததில், கைது செய்யப்பட்ட நபரின் பெயர் சந்தன் குமார் அவுராங்காபாத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
மேலும் அவர் உயர் சாதியைச் சேர்ந்தவர் என்றும் அதனால் அவருக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு இட ஓதுக்கீட்டு முறையால் கிடைக்காமல் போனதில் மனமுடைந்ததாக சந்தன் கூறியுள்ளார்.
போலீஸார் வந்து அழைத்துச் செல்லும் வரை ஜனதா தள இளைஞர் அணியினர் சந்தனை தாக்கியுள்ளனர்.
மேலும் முதலமைச்சர் மீது செருப்பை வீசுவது இது முதல்முறையல்ல. 2016ம் ஆண்டு பி.கே ராய் என்ற நபர் பாட்னா முதலமைச்சர் மீது செருப்பை வீசியதற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.