This Article is From Nov 30, 2019

வாடிக்கையாளர்களால் அச்சம்! ஹெல்மெட் அணிந்து வெங்காயத்தை விற்ற கூட்டுறவுப் பண்ணை ஊழியர்கள்!!

வெங்காயத்தை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் செல்லும் காட்சி, அதற்கு எவ்வளவு தேவை உள்ளது என்பதை காட்டுகிறது. கூடுதல் விலையில் விற்கப்பட்டாலும், வெங்காயத்தில் தரம் இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வாடிக்கையாளர்களால் அச்சம்! ஹெல்மெட் அணிந்து வெங்காயத்தை விற்ற கூட்டுறவுப் பண்ணை ஊழியர்கள்!!

ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து வெங்காயத்தை விற்பனை செய்யும் காட்சி.

Patna:

பொதுமக்கள் தள்ளுமுள்ளு செய்து வெங்காயம் வாங்கினால் காயம் ஏற்பட்டு விடாமல் இருக்க கூட்டுறவு பண்ணை ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து, வெங்காயத்தை விற்றனர். லாரி ஒன்றில் அமர்ந்து கொண்டு அவர்கள் வெங்காயம் விற்பனை செய்யும் புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது. 

உப்பும், மிளகாயைப் போல எந்தவொரு சமையல் செய்தால் அதில் வெங்காயம் இடம்பெறாமல் இருக்கது. அத்தகைய அத்தியாவசியம் மிக்க பொருளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

தமிழகம் உள்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வெங்காயத்தின் தேவை அதிகரித்திருக்கிறது. ஒரு கிலோ பல்வேறு பகுதிகளில் ரூ. 100-க்கும் அதிகமான விலைக்கு விற்பனையாகிறது.

இருப்பினும், மாநில அரசின் உதவியோடு செயல்பட்டுவரும் பசுமைப் பண்ணை நுகர்வோர் கடைகளில் வெங்காயம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் பீகாரில் உள்ள கூட்டுறவு பசுமை பண்ணையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ. 35-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறைந்த விலையில் விற்பனையாகும் வெங்காயத்தை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அதிகாலை 4 மணிக்கே அலைமோதுகிறது. 

சில சமயம் நீண்ட வரிசையில் நின்றும் வெங்காயம் காலியாகி விட்டால் மக்கள் வெறுங்கையுடன் வீடு திரும்புகின்றனர். சில இடங்களில் இதனால் ஆத்திரம் அடையும் மக்கள் ஊழியர்களை தாக்கிய சம்பவமும் நடந்திருக்கிறது.

இதனால் முன்னெச்சரிக்கையாக கூட்டுறவுப் பண்ணை ஊழியர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வெங்காயத்தை விற்பனை செய்கின்றனர். 

வெங்காய விலை உயர்வால், பல கடைகளில் வெங்காயத்திற்கு பதிலாக முட்டைக் கோஸ் பயன்படுத்தப்படுகிறது. குறைந்த விலையில், வெங்காயம் பரவலாக கிடைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

.