This Article is From Aug 12, 2019

சாக்க்ஷியை பாட்டுப் பாடி வழி அனுப்பி வைத்த கவின்!

Bigg Boss Tamil 3: கவினைப் பார்த்து 'நீங்க என்ன தப்பு பண்ணீங்க, கேம் தான விளையாடுனீங்க' என்று அவர் தந்தை சொன்ன தருணம் நெகிழ்ச்சியானது!

சாக்க்ஷியை பாட்டுப் பாடி வழி அனுப்பி வைத்த கவின்!

Bigg Boss 3: பிக் பாஸ் வீட்டிலிருந்து சாக்க்ஷி வெளியேற்றப்பட்டார்.

Bigg Boss Tamil 3: நேற்று எளிமினேஷன், முன்னதாகவே சாக்க்ஷிதான் வெளியேறப்போகிறார் என்று தகவல் வெளியாகியிருந்தது. அந்தத் தகவல் உறுதியானது. நேற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து (Bigg boss) சாக்க்ஷி வெளியேற்றப்பட்டார். முன்னதாக பிக் பாஸ், சாண்டியை அழைத்து, நாமினேஷனில் இருக்கும் மூவருக்கும் பாட்டு தயார் செய்யும்படி வேண்டியிருந்தார். இதில் கவினை இணைத்துக்கொள்ளலாம் எனவும் கூறியிருந்தார். 

நேற்று எளிமினேஷன் பகுதி வருகையில், முன்னதாக லாஸ்லியா காப்பாற்றப்பட்டார் என்று அறிவித்த கமல், பின் கவின் - சாண்டி, இருவரையும் எழுப்பி, அவர்கள் தயார் செய்து வைத்திருந்த பாடலை பாட சொன்னார். 'நம்ம நம்ம ஆர்டர்லையே போயிருவோம்' என்று சாக்க்ஷியில் ஆரம்பித்து, அடுத்து அபிராமி, லாஸ்லியா என அவர்களுக்காக தயார் செய்திருந்த பாடலை பாடினார்கள். 

சாக்க்ஷி (Sakshi Agarwal) :('சலாம் குலாமு' ராகத்தில்)

ரசகுல்லாதான், கேட்டியே ரசகுல்லாதான்,
இந்த வீட்டில் உள்ள எல்லோருக்கும் போட்டியே குல்லாதான்!

நீ மேக்கப் அள்ளி போடுறியே மூஞ்சி ஃபுல்லாதான்,
நீ மேக்கப் அள்ளி போடுறியே மூஞ்சி ஃபுல்லாதான்,
மீராதான் மீட்டிங் கேட்டானு சொன்னியே நல்லாதான்,
அந்த குறும்படத்த போட்டு பாத்தா உனக்கு குல்லாதான்!

போயிட்டு வாம்மா, சாக்க்ஷி போயிட்டு வாம்மா,
உன் அம்மா அப்பாவ நல்லபடிய பாத்துக்கோம்மா!

தன்னா நன்னானா
தன்னான தன்னா நன்னானா
தன்னா நன்னா தன்னா நன்னா
தன்னா நன்னானா!

o3m9o12g

அபிராமி (Abirami):('மாமா பைய்யா' ராகத்தில்)

அபி பொண்ணே! அபி பொண்ணே!
நீ வாய தொரந்தாலே பயம்,
உன் கண்ண பார்த்தாலும் பயம், அந்த கண்ணு கலங்கினாலும் பயம்,
இனி எங்களுக்கு இல்ல அந்த பயம், இனி எங்களுக்கு இல்ல அந்த பயம்!

மீரா மேல பாஞ்சியே,
முகென் மேல சாஞ்சியே,
கொஞ்ச நேரம் கூட அவன விட மாட்றியே!

முகென்னு பைய்யா, 
எகிறி ஓடிரு பைய்யா!

நீ டக்கரு மாடலு பொண்ணு,
நீ இல்லாட்டி எங்களுக்கு ஏது ஃபன்னு,
உன் மனசுக்குப் பட்டது பண்ணு,
நீ எப்பவுமே லைஃப்ல வின்னு,
இப்போ போயிட்டு வா கண்ணு!

63gjg7qo

லாஸ்லியா (Losliya): ('லவ் யூ.. லவ் யூ.. லவ் யூ.. லவ் யூ.. ஜாஸ்மினு' ராகத்தில்)

ஏ லாஸ்.. லாஸ்.. லாஸ்.. லாஸ்.. லாஸ்ம்மா..
அட உனக்கு என்ன உனக்கு என்ன சொல்லும்மா..

மொத வாரம் வீட்டுல, பாட்டு கட்டி ஆடுன,
போக போக வீட்டுல, எங்கேயுமே காணல,
அட என்ன ஆச்சும்மா, உனக்கு என்ன ஆச்சும்மா,
உன் மூஞ்ச பாத்தாலே ரொம்ப சுருங்கி போச்சும்மா!
கதைய சொல்லும்மா, உன் கதைய சொல்லும்மா!

உனக்காக இருக்காரு சேரப்பா,
அவரு பேசுனாலே கொஞ்சம் கொஞ்சம் போருப்பா!

செரின் லவ்வுல சப்பாத்திய தட்டுன,
அவ அண்ணனுக்கு அண்ணனுக்கு காட்டுனா!
லாஸ் சப்பாத்தில கத்திய எடுத்து குத்துனா,
அத பாத்த செரின் அய்யோ அம்மானு கத்துனா!

அட எல்லாத்தையும் ஃப்ரீயா விடு லாஸூ,
இந்த பிரச்னை எல்லாம் ஒண்ணும் இல்ல தூசு,
உங்க அப்பாகிட்ட போனப்போட்டு பேசு,
அட அவரு தான எல்லாத்துக்கும் பாஸூ,
உனக்கு பாஸூ, உனக்கு பாஸூ,
பாய் பாய் லாஸூ!

1nungd9g

'இந்த ஆர்டர்ல பாட்டு பாடனும்னு எப்படி முடிவு பண்ணீங்க, நீங்களா இந்த ஆர்டர்லதான் வெளிய போகப்போறாங்கனு முடிவு பண்ணீட்டீங்களா?' என கமல் கேட்க, 'அனைத்தும் தாங்கள் ஊட்டிய அறிவு அமிர்தம் ராஜகுரு' அப்படினு ரிப்பீட் கொடுத்துட்டாங்க கவின்-சாண்டி.

அனைத்தும் முடிந்தது, சாக்க்ஷி வெளியே சென்றுவிட்டார். வெளியே சென்ற பின் சாக்க்ஷியை கஷ்டப்படுத்தியதற்காக சாக்க்ஷி மற்றும் அவருடைய தந்தை, இருவரிடமும் கவின் மன்னிப்பு கேட்க, 'நீங்க என்ன தப்பு பண்ணீங்க, கேம் தான விளையாடுனீங்க' என்று அவர் தந்தை சொன்ன தருணம் நெகிழ்ச்சியானது!

.