This Article is From Sep 06, 2019

ஓவியா, ஜனனி, லாஸ்லியா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!

Bigg Boss Tamil: முதலில் சீசனில் ஓவியாவில் துடங்கி, இரண்டாவது சீசனில் ஜனனி, இந்த சீசனில் லாஸ்லியா வரை, பச்சோந்தி விருது வழங்கப்பட்ட அனைவரும் அதை நிராகரித்தே உள்ளனர்.

ஓவியா, ஜனனி, லாஸ்லியா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!

Bigg Boss 3 Tamil, Losliya: லாஸ்லியா - சாக்க்ஷியிடியே வெடிக்கும் சண்டை

Bigg Boss Tamil 3 Promo: பிக் பாஸ் நிகழ்ச்சி, இதுவரை மூன்று தொடர்களை கடந்துவிட்டது. இந்த மூன்று தொடர்களிலும் பல டாஸ்க்குகள் ஒன்று போலவே இருக்கிறது. இதற்கு சான்று, கடந்த வாரங்களில் நடைபெற்ற தலையனை தொழிற்சாலை டாஸ்க், பள்ளி டாஸ்க், போன்ற இன்னும் பல டாஸ்க்குகள். அப்படி, மூன்று தொடர்களில் தொன்று தொட்டு வரும் ஒரு டாஸ்க் இந்த பிக் பாஸ் விருதுகள். இதுவரை நடந்து முடிந்த இரண்டு தொடர்களிலும் இந்த விருதுகள் டாஸ்க் நிகழ்ந்த நிலையில், இந்த மூன்றாவது சீசனிலும், விருது வழங்கும் விழா நடந்துவிட்டது. அப்படி ஒவ்வொரு முறை இந்த விருது வழங்கும் விழா நடைபெறும்போதும், சர்ச்சைக்கு உள்ளாவது இந்த 'பச்சோந்தி விருது' தான். முதலில் சீசனில் ஓவியாவில் (Oviya) துடங்கி, இரண்டாவது சீசனில் ஜனனியில் (Janani) தொடர்ந்து, இந்த சீசனில் லாஸ்லியா (Losliya) வரை, இந்த விருது வழங்கப்பட்ட அனைவரும் அதை நிராகரித்தே உள்ளனர். 

முன்னதாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சாக்க்ஷி (Sakshi Agarwal), மோகன் வைத்தியா (Mohan Vaidya) மற்றும் அபிராமி (Abirami) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். இந்த முறை சற்று வித்தியாசமாக இவர்கள் கைகளில் இந்த விருது வழங்கப்பட்டது. மோகன் வைத்தியா 'முதல் விருது - பச்சோந்தி, பச்சோந்தியை போல் போலியானவர். இந்த விருது லாஸ்லியாவிற்கு' என்று அறிவித்தார். இந்த விருதை லாஸ்லியாவின் கைகளில் வழங்கினார் சாக்க்ஷி. விருதை வாங்கிய லாஸ்லியா 'எனக்கு இது வேணாம், அதனால நீங்களே வச்சுக்கோங்க' என்று கீழே போட்டுவிட்டு திரும்பிவிட்டார்.

இந்த விருது பிரச்னை இறுதியில், சாக்க்ஷி - லாஸ்லியா சண்டையாக மாறிவிட்டது. 'நானும் இங்க நின்னுட்டு விருது கொடுக்க மாட்டேன்' என்று சாக்க்ஷியிடம் ஆரம்பித்து, இருவருக்கும் இடையே பெரிய விவாதமாக மாறிவிட்டது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!

இந்த சம்பவம் சமூக வலைதள வாசிகளுக்கும் நல்ல கன்டென்டை கொடுத்துவிட்டது. யார் உண்மையான பச்சோந்தி என்று சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

.