உத்தரப் பிரதேச அமைச்சர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

கமல் ராணி  காலை 9:30 மணிக்கு சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலமானார்

உத்தரப் பிரதேச அமைச்சர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.50 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தின் தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சர் கமல் ராணி வருன் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

62 வயதான இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்த பின்னர் ஜூலை 18-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கமல் ராணி  காலை 9:30 மணிக்கு சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலமானார் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.