எஞ்சினியரிங் படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு!! விவரம் உள்ளே!

தகுதி வாய்ந்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இணைய தளமான upsc.gov.in -ல் விவரங்கள் வெளியிடப்படும்.

எஞ்சினியரிங் படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு!! விவரம் உள்ளே!

விண்ணப்பதாரர்கள் 21 - 30 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.

New Delhi:

மத்திய அரசில் காலியாக உள்ள எஞ்சினியரிங் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளது. 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., Engineering Service Exam (ESE) எனப்படும் பொறியாளர் தேர்வுகளை நடத்தி வருகிறது. 2020-ம் ஆண்டுக்கான பொறியாளர் பணித் தேர்வு குறித்த விவரங்கள் அடுத்த வாரம் வெளியாகின்றன. 

மொத்தம் எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன, விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றிருக்கும். ஆன்லைனில் இதற்காக விண்ணப்பம் செய்யலாம். செப்டம்பர் 25-ம்தேதி முதல் upsc.gov.in என்ற இணைய தளத்தில் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். 

சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன் ஆகிய பிரிவுகளுக்கு தேர்வு நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

பொறியியல் பட்டப்படிப்பை தவிர்த்து, இன்ஸ்டிடியூஷன் ஆஃப் எஞ்சினியரிங் நடத்தும் ஏ மற்றும் பி பிரிவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் பணிக்காக விண்ணப்பம் செய்யலாம். 

More News