மழையில் காதலர்கள் அடித்த முத்தம் - கொதித்தெழுந்த பங்களாதேஷ் மக்கள்

தீவிரவாதிகளால் நடக்கும் வன்முறைகளுக்கு மத்தியல், தூய்மையான அன்பு இருப்பதை நினைவுபடுத்துவதாக செய்தியாளர் தாக்கா டிரிப்யூனில் புகழ்ந்து எழுதியுள்ளார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
மழையில் காதலர்கள் அடித்த முத்தம் - கொதித்தெழுந்த பங்களாதேஷ் மக்கள்

பங்களாதேஷை சேர்ந்த ஒரு காதல் ஜோடி, கொட்டும் மழையில் தங்களை மறந்து காதலில் திளைத்து முத்தத்தை பரிமாறிக் கொண்டிருந்தனர். அந்த காட்சியைப் பார்த்த ஜிபான் அகமது என்ற புகைப்பட செய்தியாளர், அவர்களின் முழுமையான காதலை உடனே படமெடுத்துள்ளார்.

அந்த படத்தை தான் பணி செய்யும் செய்தி நிறுவனத்துக்கு அனுப்பி, பிரசூரிக்க கேட்டிருக்கிறார். ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்டனர். அதனால், அதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

வைரலான அந்த படத்துக்கு, பங்களாதேஷின் பல பகுதிகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. பொது இடங்களில் அவர்களின் செயல், ஆபாசமாக இருந்தததாக அவர்கள் கடுகடுத்தனர். மேலும், அகமது உடன் வேலை பார்த்த சக புகைப்படக்காரர்கள் அவரை தக்கியதாகவும், அவர் உடனடியாக பணியை விட்டு நீக்கப்பட்டதாகவும் தகவல் வந்துள்ளது.

“நான் அவர்களின் தூய காதலைத் தான் பதிவு செய்ய நினைத்தேன். ஆனால், அதை தவறாக புரிந்து கொண்டனர். பங்களாதேஷில் படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வெறும் பேப்பர்களை மட்டுமே படித்தவர்களாக இருக்கின்றனர். நிஜ வாழ்க்கையில் அவர்கள் படித்தவர்கள் போல நடந்து கொள்வதில்லை. நான் படம் எடுத்ததை அந்த காதல் ஜோடிகளே எதிர்க்கவில்லை. அந்த படத்தை எடுக்கும் போது எனக்கு ஆபாசமான கண்ணோட்டமே ஏற்படவில்லை” என்று அகமது வாஷிங்டன் போஸ்ட்செய்தி நிறுவனத்திடம் தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அகமது பணிபுரிந்த செய்தி நிறுவனம், அவர் தாக்கப்பட்டது, தனிப்பட்ட விஷயத்துக்காக என்றும், அவரது படத்துக்கு நாங்கள் பாராட்டு தெரிவித்தோம் என்றும் கூறுகின்றனர்.

அகமதுக்கு எதிர்ப்பு மற்றும் அல்ல மறுபுறம் ஆதரவும் பெருகி வருகிறது. தீவிரவாதிகளால் நடக்கும் வன்முறைகளுக்கு மத்தியல், இந்த புகைப்படம், தூய்மையான அன்பு என்று ஒன்று இருப்பதை நினைவுபடுத்துவதாக தனிம் அகமது என்ற செய்தியாளர் தாக்கா டிரிப்யூனில் புகழ்ந்து எழுதியுள்ளார்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................