''இது குறுத்து அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது'' என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சிதாராமன் பதிலளித்துள்ளார்.
New Delhi: இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ''பாகிஸ்தான் அணு ஆயுதங்களை அதிகரித்து வருகிறது. அதனை நாம் கவனத்தில் கொண்டு அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து நம் பாதுகாப்பை அதிகரித்து வைக்க வேண்டும்" என்று கூறியுள்ளது.
இது குறித்து மக்களவையில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ''இது குறித்து அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது'' என்று பதிலளித்துள்ளார்.
மேலும் ''பாகிஸ்தான் அணுஆயுதங்களை அதிகரிப்பது குறித்து அரசு கவனமாக உள்ளது. மேலும், அதன் சிறப்பம்சங்கள் மற்றும் மேம்பாட்டையும் கவனித்து வருகிறது'' கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் உரிய நேரத்தில் சரியான வேகத்தில் எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுதந்திரத்துக்கு பிறகு இந்தியா தனது எந்த பகுதியையாவது வெளிநாட்டிடம் இழந்துள்ளதா அல்லது பெற்றுள்ளதா என்ற கேள்விக்கு அமைச்சக தகவல்களை ஆராய்ந்து சொல்வதாக கூறினார்.