This Article is From Feb 16, 2019

ஜிம்பாப்வே தங்க சுரங்கத்தில் தண்ணீர் புகுந்து 70 பேர் பலி!

சுரங்கத்தின் இரண்டு யூனிட்களில் இருந்த 70 சுரங்க பணியாளர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டதாக அமைச்சர் ஜூலைமோயோ தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே தங்க சுரங்கத்தில் தண்ணீர் புகுந்து 70 பேர் பலி!

அதிபர் எம்மெர்சன் இதனை தேசிய பேரிடராக அறிவித்துள்ளார்.

ஜிம்பாப்வேயில் உள்ள தென்மேற்கு ஹராரேயில் சட்டவிரோதமாக தங்க சுரங்கத்தில் பணியாற்றிய 70க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் இறந்திருக்கலாம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சுரங்கத்தின் இரண்டு யூனிட்களில் இருந்த 70 சுரங்க பணியாளர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டதாக அமைச்சர் ஜூலைமோயோ தெரிவித்துள்ளார்.

அதிபர் எம்மெர்சன் இதனை தேசிய பேரிடராக அறிவித்துள்ளார்.

அரசின் சுரங்க பொறியாளர் மைக்கேல் கூறுகையில், தலைநகரிலிருந்து 145 கிமீ தொலைவில் உள்ள சுரங்கத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் உயிரோடு இருக்க மிகக் குறைந்த வாய்ப்புகளே உள்ளதாக தெரிவித்தார்.

மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மோயோ தெரிவித்தார்.

தண்ணீரை சுரங்கத்திலிருந்து வெளியேற்றவும், மக்களக்கு பாதுகாப்பளிக்கவும், இறந்தவர்களை புதைக்கவும் 2 லட்சம் டாலர் தேவை என அரசு கேட்டுள்ளது.

அரசு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் இந்த பேரழிவுக்கு தனிநபர், மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச கார்ப்பரேட்களிடம் ஜிம்பாப்வே உதவி கோரியுள்ளது.

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார சரிவை ஜிம்பாப்வே சந்தித்துள்ளது.

இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ள இந்த நாட்டில் தான் ப்ளாட்டினம், வைரம், தங்கம், நிலக்கரி மற்றும் தாமிரம் வளங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

.