MP CM Kamal Nath: ம.பி.முதல்வர் கமல்நாத் முன்னாள் ஆலோசகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை.
ஹைலைட்ஸ்
- கமல்நாத்தின் முன்னாள் உதவியாளர்கள் வீட்டில் வருமான வரி சோதனை.
- கணக்கில் காட்டப்படாத பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தகவல்.
- வீடு, அலுவலகம், வங்கி லாக்கர்களில் நடத்திய சோதனையில் எதுவும் பிடிப்படவில்
Indore: ஹவாலா வழக்கு ஒன்றில் சம்மந்தப்பட்டு இருப்பதாக கூறி, மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் (Kamal Nath) முன்னாள் சிறப்பு பணி அதிகாரி, முன்னாள் ஆலோசகர் வீடுகள், அலுவலகங்கள் உட்பட டெல்லி மற்றும் மத்திய பிரதேசத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடத்தியது.
மத்திய பிரதேசம் முதல்வரின் சிறப்பு பணி அதிகாரி பிரவீன் காக்கத் மற்றும் அவரது ஆலோசகர் ராஜேந்திர குமார் மிக்லானி ஆகியோரது வீடு மற்றும் அலுவலங்களில் நடந்த இந்த சோதனையில், வருமான வரித்துறை, காவல்துறை அதிகாரிகள் 200 பேர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து முதல்வரின் சிறப்பு பணி அதிகாரி பிரவீன் காக்கத் கூறும்போது, அதிகாலை 3.30 மணி அளவில், டெல்லியில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் எனது வீட்டின் கதவை உடைத்தனர். இந்த சோதனை எனது வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்றது. அவர்கள் எனது இரண்டு வங்கி லாக்கர்களையும் சோதனை செய்தனர்.
ஆனால், அதில் எதையும் அவர்கள் கைப்பற்றவில்லை. இந்த சோதனை முழுக்க முழுக்க அரசியல் ரீதியானது என்றார். மேலும், அதிகாரிகள் தன் வீட்டு கதவை உடைத்தாது சிரியல்ல என்றும் ஆனால், அவர்கள் யாரையும் துன்புறுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்தூரின் விஜய்நகரில் உள்ள பிரவீன் காக்கத் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடந்தது. அதேபோல், முன்னாள் ஆலோசகர் கமல்நாத்தின் ராஜேந்திர மில்கானியின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர், போபால் மற்றும் டெல்லி உள்ளிட்ட இடங்களில் முதல்வர் கமல்நாத்துடன் தொடர்பு உடையவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. பிரவீன் காக்கத், ராஜேந்திர மில்கானி, உறவினர்கள் மோசர் பயார், ரதூல் பூரியின் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
காக்கத் மற்றும் மில்கானி இருவரும் தங்களது அரசு வேலையை மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வருவதற்கு முன்னதாகவே ராஜினாமா செய்துள்ளனர். முன்னாள் மத்திய பிரதேசம் போலீஸ் அதிகாரியான காக்கத் அம்மாநில முதல்வர் கமல்நாத்தின் சிறப்பு பணி அதிகாரியாக கடந்த வருடம் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்நாத்தின் (Kamal Nath) உதவியாளர்கள் வீட்டில் நடந்த இந்த வருமான வரித்துறை சோதனையில், கோடிக்கணக்கான கணக்கில் காட்டப்படாத கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், இது ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்துகிறது, அதாவது திருடர்களே காவலாளிகளை குற்றம்சாட்டுவர் என பாஜக தேசிய செயலாளர் கைலாஷ் விஜய்வார்ஜியா கூறியுள்ளார்.