This Article is From Oct 21, 2019

Assembly Elections 2019: மகாராஷ்டிரா, ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!

Assembly Elections 2019: மகாராஷ்டிராவில் பாஜக 150 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. ஹரியானாவில், 90 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Assembly Elections 2019:அக்.24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

New Delhi:

சட்டப்பேரவை தேர்தல் நடந்து வரும் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற எளிதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளது.

காங்கிரஸ் கட்சியானது, கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் சந்தித்த தோல்வியில் இருந்தே இன்னும் மீண்டு வரவில்லை. மகாராஷ்டிராவில், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் அங்கு தேர்தலை சந்திக்கிறது. 

உத்தரபிரதேசத்தில் ஒரு மினி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது போ, அங்கு 11 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமாக, 17 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கான 53 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதனிடையே, மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஹரியானா, மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் சில மாநிலங்களில் இடைத்தேர்தல் இன்று நடைபெறுகின்றன.

தேர்தல் நடக்கும் இடங்களில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிக்க வேண்டும். அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் வந்து தங்களின் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையானது, வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையானது, வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இதில் ஆளும் பாஜக - சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளது. எதிர்த்தரப்பில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைந்துள்ளது. இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரேவின் மூத்த மகன் ஆதித்யா தாக்கரே 'வொர்லி' தொகுதியில் முதல் முறையாக போட்டியிடுகிறார். 
 

.