சிவசேனா மீண்டும் பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்தது

1989ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 35 ஆண்டுகால அமைப்பில் சேனாவும் பாஜகவும் பிரிந்தது இது இரண்டாவது முறையாகும். காங்கிரஸுடன் முதன்முறையாக கூட்டணியில் ஒப்புக் கொண்டுள்ளது.

சிவசேனா மீண்டும் பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்தது

சிவசேனாவின் அர்விந்த் சாவந்த் பதவியை ராஜினாமா செய்வதாக டெல்லியில் நேற்று காலை அறிவித்தார்.

ஹைலைட்ஸ்

  • பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடனான உறவை சிவசேனா முறித்தது
  • கவர்னர் சரத் பவாரின் தேசியவாத காங்.கட்சிக்கு அழைப்பு விடுத்தார்
  • பாஜகவுடன் சிவசேனா கூட்டணியின் போது 50: 50 அதிகாரப் பகிர்வினை கேட்டது.
New Delhi:

பாஜகவின் எல்.கே. அத்வானி மற்றும் அடல் பிஹாரி  வாஜ்பாய் ஆகியோருடன் சிவசேனா நிறுவனர்  தாக்கரேவுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ட்வீட் செய்துள்ளார்.

 பல ஆண்டுகளாக நீடித்து வந்த பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடனான உறவை சிவசேனா முறித்தது. ஆட்சி அமைப்பதற்கு சிவசேனாவை ஏற்கனவே அழைத்திருந்த நிலையில் அதற்கான இரண்டு நாள் அவகாசம் நேற்று முடிந்தது; கூடுதல் அவகாசம் தர கவர்னர் மறுத்து விட்டார்.  கவர்னர் சரத் பவாரின் தேசியவாத காங்.கட்சிக்கு அழைப்பு விடுத்தார். இன்று இரவு 8.30 வரை தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 

பாஜகவுடன் சிவசேனா கூட்டணியின் போது 50: 50 அதிகாரப் பகிர்வினை கேட்டது. பாஜக மறுத்துவிட்ட நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து மத்திய அரசில் கனரகத் தொழிற்துறை அமைச்சராக இருந்த சிவசேனாவின் அர்விந்த் சாவந்த் பதவியை ராஜினாமா செய்வதாக டெல்லியில் நேற்று காலை அறிவித்தார். இதையடுத்து 30 ஆண்டுகளாக நீடித்து வந்த பாஜக -சிவசேனா உறவு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. 

1989ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 35 ஆண்டுகால அமைப்பில் சேனாவும் பாஜகவும் பிரிந்தது இது இரண்டாவது முறையாகும். காங்கிரஸுடன் முதன்முறையாக கூட்டணியில் ஒப்புக் கொண்டுள்ளது. 

More News