மோடியின் பதவியேற்பு விழாவை டிவியில் பார்த்து ரசித்த 98 வயதான தாயார்!!

குஜராத் மாநிலம் காந்தி நகரில் பிரதமர் மோடியின் வீடு உள்ளது. நேரில் வராத மோடியின் தாயார் ஹீரா பென் தொலைக்காட்சியில் மோடியின் பதவியேற்பை பார்த்து ரசித்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மோடியின் பதவியேற்பு விழாவை டிவியில் பார்த்து ரசித்த 98 வயதான தாயார்!!

மோடியை பார்த்து கைத்தட்டி ரசிக்கும் ஹீராபென்.


New Delhi: 

நாட்டின் பிரதமராக மோடி இன்று 2-வது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். மகனின் பதவியேற்புக்கு நேரில் வராத தாயார் ஹீரா பென் குஜராத்தில் இருந்தவாறே பதவியேற்பு விழாவை டிவியில் பார்த்து ரசித்தார். 

பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னுக்கு 98 வயது ஆகிறது. அவர் குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள ரைசான் கிராமத்தில் வசித்து வருகிறார். கடந்த 23-ம்தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது மோடி தனது தயாரிடம் ஆசிர்வாதம் பெற்றார். 

முன்னதாக ஏப்ரல் 23-ம்தேதி மக்களவை தேர்தலில் ஹீரா பென் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் பேட்டியளித்த மோடியின் தாயார், தனது மகன் நாட்டிற்கு ஏராளமானவற்றை செய்துள்ளதாகவும் மேலும் அவர் செய்வார் என்றும் குறிப்பிட்டார். 

இந்த நிலையில், பாஜக வெற்றி பெற்று பிரதமராக மோடி இன்று 2-வது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் வெளிநாட்டு தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 8 ஆயிரம் பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியை தனது காந்திநகர் வீட்டில் இருந்தவாறே மோடியின் தாயார் பார்த்து ரசித்தார். இந்த புகைப்படக் காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பதிவிடப்பட்டு வருகிறது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................