This Article is From Jul 28, 2020

“சரியான நேரத்தில் இந்தியா சரியான முடிவெடுத்ததால் மற்ற நாடுகளை விட சிறந்து விளங்குகிறது”: மோடி!

இந்த மையங்கள் வெறுமென கொரோனா பரிசோதனைக்கு மட்டுமல்லாது, பின் வரும் காலங்களில் ஹெபடைடிஸ் பி மற்றும் சி, எச்.ஐ.வி, டெங்கு மற்றும் பல நோய்களுக்கான சோதனைகளுக்கும் பயன்படும்.” என பிரதமர் கூறியுள்ளார்.

“சரியான நேரத்தில் இந்தியா சரியான முடிவெடுத்ததால் மற்ற நாடுகளை விட சிறந்து விளங்குகிறது”: மோடி!

நமது முன்னணி வீரர்களின் மகத்தான பங்களிப்பினால் இது சாத்தியமாக்கப்பட்டிருக்கின்றது. உலகம் நம்மை புகழ்ந்து வருகிறது என பிரதமர் கூறியுள்ளார்

New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 14.35 லட்சமாக அதிகரித்திருக்கக்கூடிய நிலையில், சர்வதேச அளவில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா சிறப்பானதாக செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தற்போது தெரிவித்துள்ளார்.

மும்பை, நொய்டா, மற்றும் கொல்கத்தாவில் அதிநவீன கொரோனா பரிசோதனை மையங்களை திறந்து வைக்கும்போது மேற்குறிப்பிட்ட கருத்தினை தெரிவித்திருந்தார் மோடி. மேலும் அவர், “கொரோனா இறப்பு விகிதம் இந்தியாவில் மற்ற பெரிய நாடுகளை விட மிகக் குறைவு. மீட்பு விகிதம் பெரும்பாலான நாடுகளை விட சிறந்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“நமது முன்னணி வீரர்களின் மகத்தான பங்களிப்பினால் இது சாத்தியமாக்கப்பட்டிருக்கின்றது. உலகம் நம்மை புகழ்ந்து வருகிறது. நமக்கு புதிய விழிப்புணர்வு அவசியமில்லை.” என்றும் மோடி கூறியுள்ளார். மேலும், “கிராமம் மற்றும் நகர மட்டங்களில் தேவை-விநியோக சங்கிலிகளை வலுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு இந்தியரையும் நாங்கள் காப்பாற்ற விரும்புகிறோம். தற்போது நாட்டில் 11,000 க்கும் மேற்பட்ட கோவிட் பரிசோதனை மையங்கள் மற்றும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் உள்ளன. ஒரு கட்டத்தில், இந்தியா ஒரு பிபிஇ கிட் தயாரிக்கவில்லை. இப்போது இது உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக உயர்ந்துள்ளது. 1,200 க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் பிபிஇ கருவிகளை உள்ளே தயாரிக்கிறார்கள். இந்தியாவில் இன்று மூன்று லட்சம் என் -95 முகமூடிகள் தயாரிக்கப்படுகின்றன. இப்போது ஒவ்வொரு ஆண்டும் மூன்று லட்சம் வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட தயாராகி வருகிறது.” என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நொய்டா, மும்பை, மற்றும் கொல்கத்தாவில் தற்போது திறக்கப்பட்டுள்ள ஹைடெக் அதிநவீன சோதனை வசதிகள் மூன்று நகரங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 10,000 வரை சோதனை திறனை அதிகரிக்கும். இந்த மூன்று நகரங்களும் கொரோனா தொற்று பரவில் தொடர்ந்து முன்னணியில் உள்ளன. மேலும் இந்த மையங்கள் வெறுமென கொரோனா பரிசோதனைக்கு மட்டுமல்லாது, பின் வரும் காலங்களில் ஹெபடைடிஸ் பி மற்றும் சி, எச்.ஐ.வி, டெங்கு மற்றும் பல நோய்களுக்கான சோதனைகளுக்கும் பயன்படும்.” என பிரதமர் கூறியுள்ளார்.

.