This Article is From Feb 24, 2019

அருணாசல பிரதேச துணை முதல்வரின் வீட்டை எரித்த வன்முறையாளர்கள்!! – ராணுவம் குவிப்பு

முதல்வர் பெமா காண்டு அரசுக்கு எதிராக கடந்த வெள்ளிக் கிழமையில் இருந்து போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அருணாசல பிரதேச துணை முதல்வரின் வீட்டை எரித்த வன்முறையாளர்கள்!! – ராணுவம் குவிப்பு

போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூட நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

ITANAGAR:

அருணாச்சல பிரதேச தலைநகர் இடாநகரில் வெடித்த வன்முறையில், அம்மாநில துணை முதல்வர் சவ்மா மெய்னின் வீட்டை தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், வெளி மாநிலத்தை சேர்ந்த 2 பழங்குடியின மக்களுக்கு நிரந்த குடியுரிமை அளிக்க மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. இதனைக் கண்டித்து உள்ளூர் மக்கள் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முதல்வர் பெமா காண்டுவின் வீட்டைத் தாக்க போராட்டக்காரர்கள் முயற்சித்தனர். அவர்களை பாதுகாப்பு படை விரட்டியடித்தது. இந்த நிலையில் துணை முதல்வர் சவ்மா மெய்னின் வீடு போராட்டக்காரர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களையும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இடா நகரில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்தோ – திபெத் துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை என்று அருணாசல பிரதேச உள்துறை அமைச்சர் குமார் வை கூறியுள்ளார். இதற்கிடையே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நம்சால் மற்றும் சங்லாங் ஆகிய 2 பழங்குடியின மக்கள் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க அருணாசல பிரதேச அரசு முடிவு செய்திருப்பதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்துள்ளது.

.