This Article is From Sep 07, 2018

பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை - யூகங்களை உடைத்தார் சந்திர சேகர ராவ்

இதற்கு பதிலளித்த பா.ஜ.க தரப்பு “இதனால் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு தான் நஷ்டம். எங்களுக்கு எதுவும் இல்லை” என்றது

பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை - யூகங்களை உடைத்தார் சந்திர சேகர ராவ்
New Delhi:

தெலுங்கானா சட்டசபையை கலைத்து முன் கூட்டியே தேர்தல் நடத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார் சந்திர சேகர ராவ். இந்த சூழலில், கேசிஆர் பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக எழுந்தத் தகவல்களை, திட்ட வட்டமாக மறுத்துள்ளார். இதற்கு பதிலளித்த பா.ஜ.க தரப்பு “இதனால் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு தான் நஷ்டம். எங்களுக்கு எதுவும் இல்லை” என்றது. மேலும், 119 இடங்களில் தனித்து போட்டியிட இருப்பதாகவும் அக்கட்சி தரப்பு தகவல்கள் கூறின.

தெலுங்கானாவில் நிகழும் சூழல் குறித்த 10 தகவல்கள்

  1. “நான் எனது முழு ஆட்சி காலத்தை, மாநிலத்தின் வளர்ச்சிக்காக தியாகம் செய்துள்ளேன். தெலுங்கானா உடைந்து சிதறாமல் காப்பாற்றவே இந்த முடிவை எடுத்துளேன்” என்றார் கேசிஆர்.
  2. எதிர்கட்சிகளின் முட்டாள் தனங்களும் அதிகரித்து விட்டதாக அவர் சாடினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேசத்தின் மிகப் பெரிய கோமாளி என்றார்.
  3. அதே நேரம் தனது கட்சி பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க போவதாக எழுந்த யூகத்தையும் மறுத்துள்ளார். “ டி.ஆர்.எஸ் எப்போதுமே மதச்சார்பற்ற கட்சி தான் என்றார்”
  4. ஆகஸ்ட் மாதம் கேசிஆர் பிரதமர் மோடியை சந்தித்த போது, டி.ஆர்.எஸ் கட்சி பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்கும் என்று யூகங்கள் கிளம்பின. அதை தான் இப்போது அவர் மறுத்துள்ளார்.
  5. மத்திய அரசுடன் நல்ல உறவு முறையில் தான் நாங்கள் இருக்கிறோம், ஆனால் அது இரு அரசுகளின் செயல்பாட்டுக்கான விஷயமே தவிர, கூட்டணிக்காக அல்ல என்கிறார் அவர்.
  6. அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தல் நடத்தினால், பாராளுமன்ற தேர்தலுக்கு இடையில் நடத்த வேண்டும். அப்படி நடந்தால், மக்களின் கவனம் தேசிய பிரச்சனைகள் பக்கம் திரும்பும் என கேசிஆர் நினைப்பதால், இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
  7. டி.ஆர்.எஸ் கட்சியின் துணை இல்லாமலேயே 119 தொகுதிகளில் தங்களால் போட்டியிட முடியும் என பா.ஜ.க நம்பிக்கை தெரிவித்துள்ளது.
  8. இதற்கு முன் 1984-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க 24% வாக்குகள் பெற்றுள்ளது, எங்களுக்கு நம்பிக்கை தருவதாகவும், தாங்கள் தேர்தலுக்கு தயார் என்றும் பா.ஜ.க கூறுகிறது.
  9. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல ஆதரவு இருக்கிறது. ஆனாலும் கடந்த 4 ஆண்டுகளாக டி.ஆர்.எஸ் கட்சி தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
  10. டிசம்பர் மாதம் மத்திய பிரதேஷ், சட்டிஸ்கர், ராஜஸ்தானுடன் இணைத்து தெலுங்கானாவுக்கு தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

.