This Article is From Nov 29, 2019

''கூடங்குளம் உள்பட நாட்டின் அனைத்து அணுஉலைகளும் பாதுகாப்பாக உள்ளன'' - மத்திய அரசு தகவல்!!

சைபர் பாதுகாப்பு ஆய்வு, Spam Cleaning, Spam filtering, மின்னஞ்சலை ஆய்வுசெய்தல், தகவல் பாதுகாப்பு சேவை, குறிப்பிட்ட பகுதியில் இணையதள சேவை துண்டிப்பு, ஆபத்தான இணைய தளங்கள் முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

''கூடங்குளம் உள்பட நாட்டின் அனைத்து அணுஉலைகளும் பாதுகாப்பாக உள்ளன'' - மத்திய அரசு தகவல்!!

மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் அலுவலக இணையமைச்சர் பதில் அளித்துள்ளார்.

New Delhi:

நாட்டில் கூடங்குளம் உள்பட அனைத்து அணு மின் உலைகளும் பாதுகாப்பாக உள்ளது என்று மத்தியஅரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

அணுஉலைகள் பாதுகாப்பு தொடர்பான கேள்விக்கு பிரதமல் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் மாநிலங்களவையில் அளித்த பதில் - 

மத்திய அரசை பொறுத்தளவில் அணு உலைகளின் பாதுகாப்புக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறோம். அதன் பின்னர்தான் மின் உற்பத்தி கவனத்தில் கொள்ளப்படும். கூடங்குளம் அணுஉலையின் நிர்வாக அலுவலகத்தில் உள்ள இணையதளம் வைரசால் பாதிக்கப்பட்டது. இதனால் அன்றாட பணிகள் பாதிப்பை சந்தித்தன. 

அணு உலையின் கட்டுப்பாடு மற்றும் செயல்பாட்டு அமைப்பு சிறப்பாக செயல்பட்டாலும், அவை வெளியில் உள்ள இணைய தள இணைப்புடன் இணையவில்லை.இந்த கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது. 

இதன்பின்னர் 4 மாதங்களுக்கு ஒருமுறை சைபர் பாதுகாப்பு சோதனையை நடத்துவது என தீர்மானித்துள்ளோம். வல்லுனர்களை கொண்ட குழு இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ளது. 

சைபர் பாதுகாப்பு ஆய்வு, Spam Cleaning, Spam filtering, மின்னஞ்சலை ஆய்வுசெய்தல், தகவல் பாதுகாப்பு சேவை, குறிப்பிட்ட பகுதியில் இணையதள சேவை துண்டிப்பு, ஆபத்தான இணைய தளங்கள் முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

நாட்டில் கூடங்குளம் உள்ளிட்ட அனைத்து அணுமின் நிலையங்களும் பாதுகாப்பாக இருக்கின்றன. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

.