This Article is From Aug 04, 2019

காங்கிரஸ் காரியக் கமிட்டி 10-ம் தேதி கூடுகிறது! தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு!!

நாடாளுமன்ற தேர்தல் படுதோல்வியை தொடர்ந்து பதவியில் நீடிக்க மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்திருந்தார். அதன் பின்னர் நடைபெறவுள்ள முதல் காரியக் கமிட்டி இதுவாகும்.

காங்கிரஸ் காரியக் கமிட்டி 10-ம் தேதி கூடுகிறது! தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு!!

புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து கூட்டத்தில் பேசப்படவுள்ளது.

New Delhi:

காங்கிரஸ் கட்சியின் உச்சபட்ச அதிகார அமைப்பான காரியக் கமிட்டி வரும் 10-ம்தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் படுதோல்வியை தொடர்ந்து பதவியில் நீடிக்க மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்திருந்தார். அதன் பின்னர் நடைபெறவுள்ள முதல் காரியக் கமிட்டி இதுவாகும்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 91 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தது. இதன்பின்னர் கடும் அதிருப்தியில் இருந்த ராகுல் காந்தி தான் தலைவர் பதவியில் நீடிக்கப் போவதில்லை என்று கூறி வந்தார். 

அதே சமயம் காங்கிரஸ் தோல்விக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் சரிவர வேலை செய்யாததே காரணம் என்று பிரியங்கா காந்தி வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இதன் தொடர்ச்சியாக ராகுல் காந்தி ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவர் ராஜினாமா செய்ய வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

தமிழகத்திலும் ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கூறி போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த சூழலில் கட்சியின் காரியக் கமிட்டி வரும் 10-ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று மாநில அளவிலும் காங்கிரஸ் கட்சியில் பிரச்னை காணப்படுகிறது. இதுகுறித்தும் காரியக்கமிட்டி கூட்டத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நேரு - காந்தி குடும்பத்தினரை கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து வந்துள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையான பின்னர் கட்சி தலைவராக சீதாராம் கேசரி பொறுப்பேற்றார். அவரது தலைமையின் கீழ் கட்சி சரியாக இயங்கவில்லை என்று விமர்சனம் எழுந்தது. 

இந்த முறை கட்சியின் தலைவராக சோனியா அல்லது பிரியங்கா காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று கட்சிக்குள் குரல்கள் எழுகின்றன.
 

.