This Article is From May 29, 2020

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்!! அவருக்கு வயது 74.

சத்தீஸ்கர் மாநில முதல்வராக அஜித் ஜோகி நவம்பர் 2000 முதல் 2003 நவம்பர் வரை பொறுப்பில் இருந்தார். காங்கிரசில் இருந்து பிரிந்த அவர், 2016-ல் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் என்ற கட்சியை ஏற்படுத்தினார்.

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்!! அவருக்கு வயது 74.

அஜித் ஜோகியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர். 

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி (74 வயது) காலமானார். இந்த தகவலை அவரது மகன் அமித் ஜோகி தெரிவித்துள்ளார். 

மறைந்த அஜித் ஜோகிக்கு ஏற்கனவே 2 முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ராய்ப்பூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தீவிரமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

கடந்த 9-ம்தேதி அஜித் ஜோகிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டபோது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவரது உயிர் பிரிந்துள்ளது. 

.