This Article is From Nov 17, 2018

‘காங்கிரசும், பாஜகவும் பாம்புகள்’- சீறும் மாயாவதி

காங்கிரசும், பாஜகவும் ஏழை மக்களுக்காக ஏதும் செய்யவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் அஜித் ஜோகியுடன் மாயாவதி கூட்டணி அமைத்துள்ளார்.

Raipur:

சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசை அமைப்பதைக் காட்டிலும், எதிர்க்கட்சியாக இருப்பதற்குத்தான் முன்னுரிமை அளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் பாம்புகள் என அவர் விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநில தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக காங்கிரஸ் கட்சியுடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில் மாயாவதி தரப்பில் அதிக சீட்டுகளை கேட்டு பேரம் பேசப்பட்ட நிலையில், கூட்டணி ரத்தானது.

இதையடுத்து சத்தீஸ்கரின் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் கட்சியுடன் மாயாவதி கூட்டணி அமைத்துள்ளார். இந்த நிலையில் தேர்தல் குறித்து அவர் கூறியதாவது -

பாஜகவும், காங்கிரசும் பாம்புகளைப் போன்றவை. இரு கட்சிகளும் ஏழைகளுக்காகவும், விவசாயிகள், தொழிலாளர்களுக்காவும் எதுவும் செய்யவில்லை. சத்தீஸ்கர் தேர்தலில் எங்களுக்கு நிச்சயம் பெரும்பான்மை கிடைக்கும். எங்களுக்கு எந்தக் கட்சியின் ஆதரவும் தேவையில்லை. எங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், நாங்கள் எதிர்க்கட்சியாக இருப்போம். ஆனால், காங்கிரஸ் மற்றும் பாஜகவை விட நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்றார்.

.