This Article is From Feb 27, 2019

இரண்டு விமானிகள் சிக்கியுள்ளார்களா? தெளிவுபடுத்திய பாகிஸ்தான்

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது, இந்த தாக்குதலின் போது இந்தியாவை சேர்ந்த விமானி ஒருவர் பாகிஸ்தான் வசம் சிக்கியுள்ளார். இதனை உறுதிப்படுத்திய இந்தியா, அவரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியுள்ளது.

இரண்டு விமானிகள் சிக்கியுள்ளார்களா? தெளிவுபடுத்திய பாகிஸ்தான்

மிக்-21 ரக இந்திய விமானத்தை பாகிஸ்தான் கைப்பற்றியது

New Delhi:

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் தொடுத்ததை அடுத்து, பாகிஸ்தான் இன்று பதில் தாக்குதல் நடத்தியது. அப்போது இந்திய விமானப்படை பாகிஸ்தான் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது, இந்தியாவின் மிக்-21 ரக விமானத்தை பாகிஸ்தான் கைப்பற்றியது. இதில் 2 விமானிகளையும் சிறைபிடித்துள்ளதாக பாகிஸ்தான் தகவல் வெளியிட்டது. 

இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் ஆசிப் காபூர் தனது டிவிட்டர் பதிவில், பிடிப்பட்ட இந்திய விமானியின் புகைப்படத்துடன், ஒரு விமானி மட்டும் தங்கள் வசம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவித்ததாவது, பாகிஸ்தான் எப்-16 விமானப்படை விமானம் ஒன்று எல்லையில் அத்துமீறிய போது, இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேபோல், இந்தியாவின் மிக்-21 ரக விமானத்தையும் நான் இழந்துள்ளோம், நம் விமானியின் நிலையும் தெரியவில்லை என்று இந்தியா தெரிவித்தது. 

இதனிடையே, கண்கள் கட்டப்பட்ட நிலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு மத்தியில் இந்திய விமானப்படை வீரர் இருப்பது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதன் பின்னர் தகவல்களை உறுதி செய்த இந்திய வெளியுறவுத்துறை, ஒரு விமானி மட்டுமே பாகிஸ்தானிடம் சிக்கியுள்ளார் என உறுதிப்படுதியது. 

இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 'பாகிஸ்தான் வசம் பிடிபட்டுள்ள இந்திய விமானியை, அந்நாட்டு அரசு துன்புறுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. சர்வதேச மனித உரிமை விதிகளை பாகிஸ்தான் தரப்பு மதித்து நடந்துகொள்ள வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க -'விமானி பத்திரமாக திருப்பி அனுப்பப்பட வேண்டும்!' - வலியுறுத்தும் இந்தியா

.