This Article is From Mar 12, 2019

பயங்கரவாதிக்கு மரியாதையா? சர்ச்சையில் சிக்கிய ராகுல்! - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்த பாஜக தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் "#RahulLovesTerrorist" என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பிரதமர் மோடி மற்றும் அஜித் தோவால் இருவரையும் ராகுல் விமர்சித்தார்.

New Delhi:

இந்தியாவால் தேடப்படும் மிகவும் முக்கிய தீவிரவாதியை ராகுல் காந்தி மரியாதையுடன் அழைத்தாரா? இதுவே பாஜகவினர் ராகுல் மீது வைக்கும் கடும் குற்றச்சாட்டு ஆகும். அவர்கள் காங்கிரஸ் தலைவர் ராகுலை, தீவிரவாதிகளை விரும்புபவர் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஜி என ராகுல் கூறியதே இத்தனை சர்ச்சைக்கும் முக்கிய காரணம்..

மக்களவை தேர்தலை முன்னிட்டு டெல்லி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.

அப்போது கடந்த 1999ம் ஆண்டு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை விடுவிக்க வேண்டி, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டது. அப்போது 161 பயணிகள் பயணம் செய்தனர். புல்வாமாவில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் ஜி-யை சிறையிலிருந்து யார் விடுவித்தது.

 

 

எந்த கட்சி விடுவித்தது? என சற்றே சிந்தித்து பாருங்கள். முந்தைய பாஜக அரசும், தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜி்த்தோவலும் சேர்ந்து, விமானத்தில் மசூத் அசாரை அழைத்துச் சென்று, கந்தகாரில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். புல்வாமா தாக்குதலுக்கு அஜித் தோவல் ஒரு கருவியாக செயல்பட்டுள்ளார்' என குற்றம் சாட்டினார்.

இதனிடையே, ராகுல் காந்தி மசூத் அசாரை ஜி என குறிப்பிடும் இந்த வீடியோ காட்சிகள் பாஜகவினரால் வைரலாக ஆக்கப்பட்டது. மேலும், டிவிட்டரில் "#RahulLovesTerrorists" என்ற ஹேஷ்டேக்கையும் பாஜகவினர் டிரெண்ட் செய்தனர்.

.