This Article is From Jun 09, 2020

பீகாரை தொடர்ந்து மேற்கு வங்கம் சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் கவனம் செலுத்தும் அமித்ஷா!

நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த மம்தாவுக்கு பாஜகவின் இனைய வழி அணிதிரட்டல் குறித்து எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பின்னரே பாஜக அலுவலகத்திலிருந்து இந்த அணிதிரட்டல் குறித்த செய்தி வெளியானது.

பீகாரை தொடர்ந்து மேற்கு வங்கம் சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் கவனம் செலுத்தும் அமித்ஷா!

இந்த பிரச்சாரத்தில் அமித்தா, மம்தாவுக்கு எதிரான கூர்மையான எதிர்பை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kolkata:

பீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்திற்கு அடுத்தபடியாக, ஏப்ரல் 2021-ல் நடக்க இருக்கும் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்தும் விதமாக தனது பிரச்சாரத்தினை சமூக ஊடகங்கள் வழியாக இன்று காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷா. இந்த நிகழ்வில் மேற்கு வங்கத்தின் அனைத்து பாஜக தலைவர்களும் பங்கெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த அணிதிரட்டல்கள் இம்மாநிலத்தில் அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்தும் என மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் நேற்று தெரிவித்திருந்தார். இணைய வாயிலாக மேற்கொள்ளப்படும் இந்த அணி திரட்டல்களில் அதிக எண்ணிக்கையிலானவர்களை பங்கேற்க செய்து சாதனை படைப்போம் என்றும் கூறியுள்ளார்.

பீகாரை பொறுத்த அளவில், மாநிலம் முழுவதும் 70 ஆயிரம் எல்இடி  டிவிகள் பொருத்தப்பட்டு ஏறத்தாழ 43 லட்சம் மக்கள் பங்கெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மேற்கு வங்கத்தில் எத்தனை எல்இடி டிவிகள் பொருத்தப்பட உள்ள என்பது குறித்து திலீப் கோஷ் எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை.

ஆண்டு தோறும் ஜூலை 21 அன்று தியாகிகள் தின பேரணியை திரிணாமுல் காங்கிரஸ் முன்னெடுக்கும். இந்நிலையில், இந்த காலத்தில் பாஜக போன்று மெய்நிகர் அணிதிரட்டலை முடிவு செய்துள்ளீர்களா? என்கிற கேள்விக்கு “பாஜகவுக்கு எங்களால் எதையும் விட்டுக்கொடுக்க முடியாது“ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த மம்தாவுக்கு பாஜகவின் இனைய வழி அணிதிரட்டல் குறித்து எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பின்னரே பாஜக அலுவலகத்திலிருந்து இந்த அணிதிரட்டல் குறித்த செய்தி வெளியானது.

இந்த லாக்டவுன் காலக்கட்டங்களில் மம்தாவும், அமித்ஷாவும் பல முறை ஒருவர் மற்றொருவருக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த பிரச்சாரத்தில் அமித்தா, மம்தாவுக்கு எதிரான கூர்மையான எதிர்பை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த மாதம் பாஜக, “மேற்கு வங்கம் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த தவறிவிட்டது என குற்றம் சாட்டியிருந்தது.“ பதிலுக்கு மம்மா “நாங்கள் தவறிவிட்டோமெனில் அமித்ஷா ஏன் அதை சரி செய்திருக்கக்கூடாது?“ என காட்டமான கேள்வியை எழுப்பிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல, முதலமைச்சர்களுடனான பிரதமரின் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த அமித்ஷா மீது மம்தா பகிரங்கமாக விமர்சனத்தினை முன் வைத்திருந்தார். மத்திய உள்துறை அமைச்சகம் தனது குழுக்களை மேற்கு வங்கத்திற்கு மாநில அரசின் அனுமதியில்லாமல் அனுப்பியிருந்ததற்கு இந்த விமர்சனத்தை மத்தா முன்வைத்திருந்தார்.

இன்று நடக்க இருக்கும் இணைய வழி அணிதிரட்டல்களின் நோக்கமாக வெறுமென தேர்தல் பரப்புரை மட்டுமல்லாது, வாக்காளர்களின் விகிதத்தினை அதிகரிக்கவும் பாஜக முயல்கின்றது. கடந்த மக்களவை தேர்தலில் பாஜக மேற்கு வங்கத்தில் 42 இடங்களில் 18 இடங்களை பிடித்தது. திரிணாமுல் இடை தேர்தல்களில் வென்று மீண்டெழுந்தது. இந்நிலையில், திரிணாமுல் கொரோனா தொற்றினை தவறாக கையாண்டதாக கூறி பாஜக தொடர்ந்து கருத்தினை பரப்பி வருகின்றது.

புலம் பெயர் தொழிலாளர்களின் இடப்பெயர்வு, மாவட்டங்களில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் முறைகேடு போன்ற குற்றச்சாட்டுகள் தற்போது ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

.