This Article is From Mar 03, 2020

'இந்தியன் 2' விபத்து- விசாரணைக்கு நேரில் ஆஜரான கமல்ஹாசன்!

தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது சென்னை மாநகர போலீஸ்

'இந்தியன் 2' விபத்து- விசாரணைக்கு நேரில் ஆஜரான கமல்ஹாசன்!

இன்று விசாரணைக்காக நேரில் ஆஜரானார் 'இந்தியன் 2' திரைப்படத்தின் நடிகரான கமல்ஹாசன். 

ஹைலைட்ஸ்

  • இந்தியன் 2 திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது
  • இயக்குநர் ஷங்கர், திரைப்படத்தை இயக்கி வருகிறார்
  • சென்னையில்தான் படப்பிடிப்பு நடந்து வந்தது

சில நாட்களுக்கு முன்னர் 'இந்தியன் 2' படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் மரணமடைந்தார்கள். தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது சென்னை மாநகர போலீஸ். இந்நிலையில் இன்று விசாரணைக்காக நேரில் ஆஜரானார் 'இந்தியன் 2' திரைப்படத்தின் நடிகரான கமல்ஹாசன். 

சென்னையை அடுத்துள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில்தான் ‘இந்தியன் 2' ஷூட்டிங் நடந்து வந்தது. அப்போது எதிர்பாராத விதமான கிரேன் விழுந்ததில் படத்தில் பணி செய்து வந்த 3 துணை இயக்குநர்கள் உயிரிழந்தனர். 

இந்த சம்பவத்தில் 9 பேருக்குக் காயம் ஏற்பட்டது. இந்த விபத்து நடந்தபோது கமல்ஹாசன், படப்பிடிப்புத் தளத்தில்தான் இருந்தார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் சென்னை போலீஸ், கவனக்குறைவாகச் செயல்பட்டதால் ஏற்பட்ட விபத்து மற்றும் காயம் ஏற்படுத்தியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளது. சென்ற வாரம் படத்தின் இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

.