This Article is From Jul 11, 2020

நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று; மருத்துவமனையில் அனுமதி!

மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அமிதாப் பச்சன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று; மருத்துவமனையில் அனுமதி!

தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறது என்று அமிதாப் சொன்னதைத் தொடர்ந்து, பலரும் அவர் விரைவாக குணமடைய வேண்டும் என்று சொல்லி வருகின்றனர். 

ஹைலைட்ஸ்

  • கொரோனா தொற்று இருப்பதை அமிதாப் ட்வீட்டர் மூலம் கூறியுள்ளார்
  • குடும்பத்தினருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அமிதாப் தகவல்
  • மும்பையில் உள்ள மருத்துவமனையில் அமிதாப் அனுமதிக்கப்பட்டுள்ளார்

பாலிவுட் திரை உலகத்தின் பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “எனக்கு கொரோனா பாசிட்டிவ் எனத் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். கடந்த 10 நாட்களாக என்னுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார். 

அமிதாப் பச்சன், மும்பையில் வசித்து வருகிறார். இந்திய அளவில் கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக மும்பை உள்ளது. அங்கு இதுவரை 91,745 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,244 பேர் வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார்கள்.

மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அமிதாப் பச்சன் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது எனத் தகவல் வந்துள்ளது. 

தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறது என்று அமிதாப் சொன்னதைத் தொடர்ந்து, பலரும் அவர் விரைவாக குணமடைய வேண்டும் என்று சொல்லி வருகின்றனர். 

இயக்குநர் குனால் கோலி, “உடலைப் பார்த்துக் கொள்ளுங்கள் சார். லவ் யூ. மீண்டும் உடல் நலம் சரியாகிவிட்டது, வீட்டுக்குச் செல்கிறேன் என்கிற உங்கள் ட்வீட்டுக்காக காத்திருக்கிறேன்,” என்றுள்ளார்.

நடிகை திவ்யா தத்தா, “சீக்கிரம் குணமடைய வாழ்த்துகிறேன் சார்” எனக் கூறியுள்ளார். 
 

.