This Article is From Oct 25, 2018

அன்டார்ட்டிக்காவில் மிதக்கும் சமசதுர பனித்தொடர்..!

இச்சம்பவங்கள் நிகழ்ந்தது பருவ நிலை மாற்றத்தினாலா, வேறு சில காரணங்களினாலா என்பது நமக்கு தெரியாததால், காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அன்டார்ட்டிக்காவில் மிதக்கும் சமசதுர பனித்தொடர்..!

பனித்தட்டிலூர்ந்து உடைந்து வந்து மிதக்கும் இப்பனிப்பாறையை இடக்கிடப்பியல் மேப்பிங் திட்டம் மூலம் படம்பிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

அன்டார்ட்டிக்காவில் கல்லூரி வளாகத்தின் அளவுள்ள சமசதுர பனித்தொடர் உடைந்து மிதந்து வருகிறது.

அன்டார்ட்டிக்கா தீபகற்பத்தில் உள்ள பனித்தட்டிலிருந்து உடைந்து வந்து மிதக்கும் இப்பனிப்பாறையை இடக்கிடப்பியல் என்ற இடத்தில் மேப்பிங் திட்டம் மூலம் படம் பிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். நாசா எடுத்துள்ள வான்வழி புகைப்படத்தில் இருந்த அப்பனித்தொடர் தானாகவே சமசதுர வடிவத்தில் மிதப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வாளர்கள் இந்த பனிப்பாறை தானாக உடைந்து விழுந்ததாகவும் இதனால் மற்ற பனிப்பாறைகளுக்கு ஆபத்து இல்லை எனவும் தெரிவித்தனர். இது கடந்த மே மாதம் லார்சன் சி என்னும் பனித்தட்டிலிருந்து உடைந்து வந்திருக்கிலாம். இதனால் மற்ற பனிப்பாறை உடையலாம் என அஞ்சப்படுகிறது.

.

fmnk3h4g

லார்சன் சி என்னும் பனித்தட்டு வடக்கே அமைந்துள்ள தீபகற்பத்திலிருந்து 1995 ஆம் ஆண்டு உடைந்தது. 2002 ஆம் அண்டு லார்சன் பி உடைந்து வந்தது என அறிவியல் பதிவு உண்டு. கடந்த ஜூலை மாததம் லார்சன் சி   பனித்தட்டு உடைந்த போது 2780 அடி, அதாவது மேரிலாண்டு மாகாணத்தின் பரப்பளவிற்கு சமமான இருந்தது.

இந்த சமசதுரமான பனிப்பாறையை இடக்கிடப்பியல் மேப்பிங் திட்டம் மூலம் படம்பிடித்துள்ளனர். இப்பனிப்பாறை மேலும் பனிக்கட்டிகளாக உடைய வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. இது, மே மாததிற்குப் பிறகு ஆ-68 பாவ்டன்னுடன் மோதிய பிறகு சிறு கட்டிகளாக உடைய உள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வாளர் ஷூமன் கூறுகையில், 'லார்சன் சி-க்கு இது நல்லதில்லை ஆனால் லார்சன் ஏ மற்றும் லார்சன் சி போல் தீபகற்பத்தின் அருகே இல்லாமல் சற்று விலகி இருப்பது நல்லது' என தெரிவித்தார்.

பனித்துண்டு கடல்மட்டத்தின் தரையுடன் மோதும் போது வடவமில்லா பனிப்பாறைகளை உருவாக்குகிறது. அவ்வாறு உடைந்து செல்லும் போது அதற்கு உராய்வு ஏற்படாது அதனால் உடைந்து செல்லாமல் மிதக்கின்றன.

ஷூமன் கூறுகையில் சமசதுரமாக இப்பனிப்பாறை உடைந்த்து அசாதரனமான விஷயம் என குறிப்பிட்டார். மேலும் அதை சுற்றியுள்ள பனிப்பாறைகள் பல வடிவங்களில் உடைந்து வருகிறது.

இச்சம்பவங்கள் நிகழ்ந்தது பருவ நிலை மாற்றத்தினாலா, வேறு சில காரணங்களினாலா என்பது நமக்கு தெரியாததால், காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.