This Article is From Jan 28, 2019

உ.பி-யில் விபத்துக்கு உள்ளானது விமானப் படையின் போர் விமானம்..!

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

உ.பி-யில் விபத்துக்கு உள்ளானது விமானப் படையின் போர் விமானம்..!

லக்னோவிலிருந்து 322 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குஷிநகரில்தான் இந்த விபத்து நடந்துள்ளது.

Kushinagar, Uttar Pradesh:

இந்திய விமானப் படையின் போர் விமானம் ஒன்று, இன்று காலை உத்தர பிரதேசத்தில் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. 

லக்னோவிலிருந்து 322 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குஷி நகரில்தான் இந்த விபத்து நடந்துள்ளது. ஜாக்குவார் நிறுவனத்தின் போர் விமானம்தான் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 

 

 

அதிர்ஷ்டவசமாக, விமானத்திற்கு உள்ளே இருந்த விமானி தப்பித்துவிட்டார். கோராக்பூர் விமான நிலையத்திலிருந்து இன்று டேக்-ஆஃப் ஆனது போர் விமானம். வழக்கமான பயிற்சியில் விமானி ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 


 

.