டெல்லி ஓட்டலில் துப்பாக்கி காட்டி மிரட்டிய முன்னாள் எம்.பி மகன்… அதிர்ச்சி வீடியோ!

இந்த விவகாரம் குறித்து டெல்லி காவல் துறை, ஆயுதங்கள் தடுப்புச் சட்டத்திற்குக் கீழ் பாண்டே மீது வழக்குத் தொடர்ந்துள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS

ஆஷிஷ் பாண்டே மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது


New Delhi: 

டெல்லியில் இருக்கும் ஒரு 5 நட்சத்திர ஓட்டலில் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி-யின் மகன் துப்பாக்கியுடன் மிரட்டும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அந்தக் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் துப்பாக்கியுடன் வரும் நபர், ஆஷிஷ் பாண்டே என்றும், அவர் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.பி-யின் மகன் என்றும் தெரிய வந்துள்ளது. பாண்டேவின் செயல் சமூக வலைதளங்களில் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. 

10 நொடிகள் ஓடும் அந்த வீடியோ பதிவில், பாண்டே, பெண்கள் கழிவறைக்கு உள்ளே நுழைவதற்கு ஒரு பெண் எதிர்ப்புத் தெரிவிக்கிறார். அதற்கு பாண்டே, அந்தப் பெண்ணைத் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டுகிறார். ஒரு கட்டத்தில் பாண்டேவுடன் வந்திருந்த நண்பர்களும் ஓட்டல் ஊழியர்களும் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்துகின்றனர். இந்த வீடியோ பதிவு அக்டோபர் 14 ஆம் தேதி, ஒரு பார்ட்டியின் போது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த விவகாரம் குறித்து டெல்லி காவல் துறை, ஆயுதங்கள் தடுப்புச் சட்டத்திற்குக் கீழ் பாண்டே மீது வழக்குத் தொடர்ந்துள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லக்னோவில் பாண்டே, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருபவர் என்றும், அவர் அடிக்கடி டெல்லிக்கு வந்து ஓட்டல்களில் தங்குவார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................