3 முட்டையின் விலை ரூ. 1600 : 5 நட்சத்திர உணவக பில்லினால் நொந்து போன இசையமைப்பாளர்

வெறும் 3 முட்டைகளுக்கு ரூ. 1672 கட்டணமாக வசூலிக்கப்பட்டது என்று சேகர் ரவ்ஜியானி ட்வீட் செய்துள்ளார்.

3 முட்டையின் விலை ரூ. 1600 : 5 நட்சத்திர உணவக பில்லினால் நொந்து போன இசையமைப்பாளர்

இசையமைப்பாளர் சேகர் ரவ்ஜியானி தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்

Ahmedabad:

பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் தனது எதிர்பாராத அனுபவத்தைப் பற்றி ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். ஜூலை மாதம் சண்டிகரில் நட்சத்திர ஹோட்டலில் இரண்டு வாழைப்பழங்களுக்கு ரூ. 442 பில் வழங்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வெகுவாக பேசப்பட்டது. 

இப்போது இசையமைப்பாளர் சேகர் ரவ்ஜியானி இதேபோன்ற ஒரு அனுபவத்தையே ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.  வெறும் 3 முட்டைகளுக்கு ரூ. 1672 கட்டணமாக வசூலிக்கப்பட்டது என்று சேகர் ரவ்ஜியானி ட்வீட் செய்துள்ளார். 

இதுபோல் நடிகர் ராகுல் போஸ் பகிர்ந்த ட்விட்டர் பதிவினால் அதிக கட்டணம் வசூலித்ததற்காக ரூ. 25,000 அபராதம் ஹோட்டலுக்கு விதிக்கப்பட்டது. 

More News