This Article is From Jan 09, 2020

பத்தே நொடிகளில் முட்டையின் மேலோட்டை உரிக்கலாம் : இந்த வீடியோ பாருங்க

இந்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து 3.7 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

பத்தே நொடிகளில் முட்டையின் மேலோட்டை உரிக்கலாம் : இந்த வீடியோ பாருங்க

10 வினாடிகளுக்கும் குறைவான இந்த வீடியோவில் வேகவைத்த முட்டையின் மேலோட்டை உரிக்கும் நுட்பத்தை விளக்குகிறது


வேகவைத்த முட்டையின் மேலோட்டை எப்படி எளிதாக உரிப்பது என்பது குறித்த வீடியோ ட்விட்டரில் வைரலாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட வீடியோ ட்விட்டரில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. 10 வினாடிகளுக்கும் குறைவான இந்த வீடியோவில் வேகவைத்த முட்டையின் மேலோட்டை உரிக்கும் நுட்பத்தை விளக்குகிறது.

வீடியோவில் ஒரு நபர் வேகவைத்த முட்டையை ஒரு கண்ணாடி டம்ளரில் போட்டு  குளிர்ந்த நீரை நிரப்புகிறார். பின் டம்ளரை வேகமாக குலுக்குகிறார். சில நொடிகள் அதன் மேலோடு தனியே வந்து விடுகிறது. 

முட்டையின் மேலோட்டை உரிக்கும் எளிய வழிக்கான வீடியோவை கீழே காணலாம்:

இந்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து 3.7 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. 74,000 லைக்குகளையும் பெற்றுள்ளது. பலர் வீடியோவில் தங்களின் வியப்பை பகிர்ந்துள்ளனர். 

இந்த எளிதான வழி உண்மையில் பயனுள்ளதாக இருக்கிறதா  என்கிற விவாதத்தையும் தூண்டியுள்ளது. பலர் இந்த ட்ரிக் வேலை செய்யவில்லை என்று தெரிவித்தனர்.

சமையல் முறையில் எளியவழிகளை சொல்லும் வீடியோக்கள் ட்விட்டரில் வைரலாகுவது முதல்முறையல்ல. இதற்கு முன்பு பூண்டு உரிக்கும் வீடியோ வைரலாகியது.

Click for more trending news


.