This Article is From Oct 09, 2018

சென்னையில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த நபர் கைது!

போலி பாஸ்போர்ட் உடன் வங்கதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், இலங்கைக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் செல்ல முயலும் போது கைது செய்யப்பட்டுள்ளார்

சென்னையில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த நபர் கைது!

நேற்று சென்னை விமான நிலையத்தில் மித்ரா கைது செய்யப்பட்டுள்ளார். (கோப்புப் படம்)

Chennai:

போலி பாஸ்போர்ட் உடன் வங்கதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், இலங்கைக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் செல்ல முயலும் போது கைது செய்யப்பட்டுள்ளார். 

37 வயதாகும் மித்ரா என்னும் வங்கதேச குடிமகன், இந்தியாவுக்கு சாலை மார்க்கமாக வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அவர், இலங்கையின் கொழும்புவுக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் போலி பாஸ்போர்டை தயார் செய்து புறப்பட ஆயத்தமாகியுள்ளார்.

ஆனால், அவர் மீது சந்தேகம் கொண்ட விமான நிலைய அதிகாரிகள், மித்ராவை அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது அவர் கையில் வைத்திருந்தது போலி பாஸ்போர்ட் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரித்து வருகிறது காவல் துறை.


 

.