This Article is From Dec 31, 2018

தலித் மாணவரை ராகிங் செய்த 5 மருத்துவ கல்லூரி மாணவர்கள் கைது

கிறிஸ்துமஸ் தினத்தன்று குடித்துவிட்டு குற்றச்செயலில் ஈடுபட்டதாக பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர்.

தலித் மாணவரை ராகிங் செய்த 5 மருத்துவ கல்லூரி மாணவர்கள் கைது

19 வயது தலித் மாணவரை 5 பேர் சேர்ந்து துன்புறுத்தியுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • The five students verbally abused and slapped the 19-year-old student
  • The accused from north India, were drinking on Christmas eve: Police
  • They took him to the building terrace and continued to abuse him
Bengaluru:

பெங்களூரு ராஜாஜி நகரில் 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து தலித் மாணவர் ஒருவரை ராகிங் செய்துள்ளனர்.  இதுதொடர்பாக 5 பேரையும் கைது செய்து பெங்களூரு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 


கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடிய வட இந்திய மாணவர்கள் சிலர் குடித்து விட்டு தலித் மாணவரை ராகிங் செய்தனர் . இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட தலித் மாணவர் புகார் அளித்துள்ளார். 


அதன்பேரில் நடவடிக்கை எடுத்துள்ள போலீசார் 5 மாணவர்களை கைது செய்துள்ளனர். தகாத வார்த்தைகளால் பேசியது, கன்னத்தில் அறைந்தது உள்ளிட்டவற்றை அவர்கள் செய்ததாக போலீசார் கூறினர்.  


ஜாமினில் வெளிவர முடியாத அளவுக்கு எஸ்.சி, எஸ்.டி. பிரிவு, கர்நாடக கல்வி சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குகள் அந்த 5 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

.