This Article is From Aug 26, 2020

தமிழகத்தில் இன்று 5,958 பேர் கொரோனாவால் பாதிப்பு; 118 பேர் உயிரிழப்பு!

மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 3,97,261 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 5,958 பேர் கொரோனாவால் பாதிப்பு; 118 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 5,958 பேர் கொரோனாவால் பாதிப்பு; 118 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,958 பேர் கொரோனா வைரஸாஸ் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 3,97,261 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

எனினும், இன்று ஒரே நாளில் 5,606 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 3,38,060 பேர் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து, 52,362 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனிடையே, இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 6,839ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் இன்று புதிதாக 1,290 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1,29,247 ஆக உள்ளது. தொடர்ந்து, 1,13,092 பேர் குணமடைந்துள்ளனர். 13,517 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதேபோல், சென்னையில் இன்று மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 2,638 ஆக உள்ளது. 

.