This Article is From Oct 03, 2018

கோயம்பேட்டில் ஏசி-யிலிருந்து வாயு கசிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

போலீஸ், மூவரது உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

கோயம்பேட்டில் ஏசி-யிலிருந்து வாயு கசிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

சென்னை, கோயம்பேட்டில் இருக்கும் ஒரு வீட்டில், ஏசி எந்தித்திலிருந்து வாயு கசிந்துள்ளது. இதனால், வீட்டிலிருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கோயம்பேட்டில் சரவணன் மற்றும் கலையரசி தம்பதி, மகன் கார்த்திகேயனுடன் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு, மூவரும் ஏசி எந்திரத்தை போட்டுவிட்டு, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். நேற்று காலை வெகு நேரம் ஆகியும் மூவரும் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. இதனால், அக்கம் பக்கத்தில் இருந்த உறவினர்கள், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கையில் மூவரும் இறந்த நிலையில் இருந்ததைப் பார்த்துள்ளனர். இதையடுத்து, ஏசியிலிருந்து வாயு கசிவதைப் பார்த்த உறவினர்கள், அதை அணைத்துவிட்டு, மூவரது உடலையும் வெளியே கொண்டு வந்து கதறி அழுதனர்.

இதையடுத்து சம்பவத்தைக் குறித்து கோயம்பேடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ், மூவரது உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

.