This Article is From Oct 16, 2018

ஏரியில் செல்பி எடுக்க முயற்சி! - 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கர்நாடகாவின் துமாகுரு மாவட்டத்தில் சித்தாங்கா கல்லூரி மாணவர்கள் 50 பேர் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள டோபஸ்பெட் பகுதிக்கு சென்றுள்ளனர்

ஏரியில் செல்பி எடுக்க முயற்சி! - 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ஏரியிலிருந்து உடல்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Bengaluru:

ஏரியில் நின்று செல்பி எடுக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக மாணவர்கள் 3 பேரும் ஏரிக்குள் தவறி விழுந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

50-க்கும் மேற்பட்ட சித்தாங்கா கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என்.எஸ்.எஸ் முகாமுக்காக, பெங்களூரு புறநகர் டோபஸ்பெட் பகுதிக்கு சென்றுள்ளனர்.

அதில், 16-17 வயது கொண்ட 3 மாணவர்கள் சித்தேஸ்வரா கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து, கோவில் அருகில் உள்ள ஏறிக்கு சென்ற அந்த மாணவர்கள் ஏறியின் கரையில் நின்று தங்களது செல்போனில் செல்பி எடுக்க முயிற்சி செய்துள்ளனர்.

அதில், எதிர்பாராத விதமாக ஒரு மாணவர் நீருக்குள் தவறி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற இரண்டு மாணவர்களும் விழுந்த மாணவனை காப்பாற்ற அவர்களும் நீரில் குதித்துள்ளனர்.

ஆனால், 3 பேருக்கும் நீச்சல் தெரியாததால் 3 பேரும் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, தற்போது ஏரியிலிருந்து மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

.