This Article is From Jun 27, 2019

2வது மாடியிலிருந்து தவறி விழும் குழந்தை கேட்ச் பிடித்த இளைஞர் - வைரல் வீடியோ

அந்த குழந்தையின் குடும்பத்தினர் அந்த இளைஞனுக்கு 200 டர்கீஸ் லிராஸ் வெகுமதியாக கொடுத்துள்ளனர்.

2வது மாடியிலிருந்து தவறி விழும் குழந்தை கேட்ச் பிடித்த இளைஞர் - வைரல் வீடியோ

2வயது குழந்தை மாடியிலிருந்து கீழே விழுந்தபோது இளைஞர் பிடிக்கும் காட்சி

இஸ்தான்புல் நாட்டில் ஃபெய்த் மாவட்டத்தில் இரண்டு வயது குழந்தை 2வது மாடியிலிருந்து ஜன்னல் வழியே தவறி விழுந்துள்ளது.  நல்வாய்ப்பாக கீழே நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் குழந்தையினை பிடித்துள்ளார். இதனால், குழந்தை எந்தவித காயமின்றி தப்பித்துள்ளது. 

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இரண்டு வயது குழந்தை ஜன்னல் வழியே தவறி விழுந்துள்ளது. குழந்தையின் தாய் அந்த நேரத்தில் சமையல் செய்து கொண்டிருந்ததாகத் தெரிகிறது.  

இந்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியுள்ளது. குழந்தையை சரியான நேரத்தி பிடித்த இளைஞர் சாபத் அல்கேரியன் நாட்டைச் சேர்ந்தவர். அந்த இளைஞர அங்குள்ள வொர்க்சாப்பில் பணிபுரிந்து வருகிறார்.

அந்த குழந்தையின் குடும்பத்தினர் அந்த இளைஞனுக்கு 200 டர்கீஸ் லிராஸ் வெகுமதியாக கொடுத்துள்ளனர். 

Click for more trending news

.