This Article is From Mar 07, 2019

லக்னோவில் 2 காஷ்மீரிகள் மீது வலதுசாரிகள் கடும் தாக்குதல்! - வீடியோ

லக்னோவில் நேற்று மாலை 5 மணி அளவில், காஷ்மீரை சேர்ந்த உலர் பழ விற்பனையாளர்கள் 2 பேர் கடும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

லக்னோவின் பரபரப்பான சாலையில் 2 காஷ்மீரி பழ விற்பனையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

Lucknow:

உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னோவின், பரபரப்பான சாலையில் பழ விற்பனை செய்து விந்த 2 காஷ்மீரிகளை வலதுசாரி அமைப்பினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோவை அந்த அமைப்பை சேர்ந்த ஒருவர் வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவம், லக்னோவில் நேற்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றுள்ளது. 2 காஷ்மீரிகளை தாக்கும் அந்த வலதுசாரி குழுவினர், அவர்கள் காஷ்மீர்கள் என்பதாலே தாக்குகிறோம் என்று கூறுகின்றனர். இவை அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

அந்த வீடியோவில், காவி உடை அணிந்த 2 பேர், சாலையின் ஓரமாக அமர்ந்திருந்த 2 காஷ்மீரி பழ விற்பனையாளர்களை கட்டையால் கடுமையாக தாக்குகின்றனர். மற்றொரு வீடியோவில் அடி வாங்கும் நபர் தனது தலையில் கையை வைத்து தடுத்து தாக்குதல் காரர்களிடம் அடிப்பதை நிறுத்தமாறு கெஞ்சுகிறார்.

இன்னொரு வீடியோவில், காவி உடை அணிந்த அந்த நபர், 2வது பழ வியாபாரியிடம் தனது அடையாள அட்டையை காட்டும் படி கூறுகிறார். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து செல்கின்றனர்.

இதனிடையே உள்ளூர் நபர்கள் அந்த வலதுசாரிகள் தாக்குவதை தடுத்து நிறுத்தி அறிவுரை கூறுகின்றனர். சட்டத்தை உங்கள் கையில் எடுக்காதீர்கள் எதுவாக இருந்தாலும் போலீஸை அழையுங்கள் என்று அவர்கள் வலதுசாரிகளுக்கு கூறினர்.

பல வருடங்களாக அந்த பகுதயில் உலர்ந்த பழங்களை விற்பனை செய்துவருகின்றனர் அந்த 2 காஷ்மீரிகள்.

இதகுறித்து அந்தபகுதி போலீஸார் கூறும்போது, விசாரணை நடந்து வருகிறது. தாக்குதலில் ஈடுபட்ட 2 பேர் மீதும் கலகம் ஏற்படுத்தியது மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் மற்றொருவரையும் கைதுசெய்வோம் என்று கூறினார்.

எனினும், தாக்குதலில் ஈடுபட்ட மற்றொருவர், விஷ்வ இந்து தாள் அமைப்பின் தலைவர் என்று கூறப்படுகிறது. அவர் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், முகநூலில் தாக்குதல் நடத்திய வீடியோவை அவரே பதிவு செய்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

.