This Article is From Jan 09, 2020

15 நாடுகளின் பிரநிதிகள் ஜம்மு காஷ்மீரை பார்வையிட்டனர்! அரசியல் தலைவர்களுடன் மதிய விருந்து!!

Foreign delegates' visit to Jammu and Kashmir: அமெரிக்கா, தென் கொரியா, மொராக்கோ, நைஜர், நைஜீரியா, கயானா, அர்ஜென்டினா, நார்வே, பிலிப்பைன்ஸ், மாலத்தீவு, வியட்நாம், வங்க தேசம், டோகோ, பிஜி, பெரு நாடுகளின் பிரதிநிதிகள் ஜம்மு காஷ்மீருக்கு சென்றனர்.

15 நாடுகளின் பிரநிதிகள் ஜம்மு காஷ்மீரை பார்வையிட்டனர்! அரசியல் தலைவர்களுடன் மதிய விருந்து!!

வெளிநாட்டு பிரதிநிதிகளின் வருகையின் மூலம் காஷ்மீர் இயல்பு நிலையில் உள்ளதைப் போல காட்டுவதற்கு மத்திய அரசு முயல்கிறது என்று பிடிபி கட்சி விமர்சித்துள்ளது.

Srinagar:

ஜம்மு காஷ்மீரில் இன்று அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட 15 நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையிட்டனர். நேரடியாக களத்திற்கு சென்ற அவர்கள், காஷ்மீர் நிலவரம் குறித்து அறிந்து கொண்டனர்.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கிய பின்னர் இரண்டாவது முறையாக வெளிநாடுகளின் பிரதிநிதிகள் அங்கு செல்கின்றனர். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் லடாக், காஷ்மீர் என 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.  

கடந்த முறையைப் போன்றும் இந்த முறை ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவுக்கு பிரதிநிதிகள் குழு சென்றது. அங்குள்ள உள்ளூர் மக்கள் மற்றும் ராணுவத்திடம் காஷ்மீர் சூழல் குறித்து கேட்டறியப்பட்டது. புதிதாக சொல்லிக் கொள்ளும் வகையில், முன்னாள் அமைச்சர் அல்தாப் புகாரி தலைமையிலான அரசியல் பிரதிநிதிகள் குழு வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்தித்து பேசினர். 

அல்தாப் புகாரி மெகபூபா முப்தியின் பிடிபி கட்சியின் முக்கிய தலைவர் ஆவார். காஷ்மீரில் ஏராளமான அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் இருந்து வரும் சூழலில், அல்தாப் மற்றும் வெளியில் உள்ளார்.

வெளிநாட்டு பிரதிநிதிகள் உடனான சந்திப்பு குறித்து என்.டி.டி.வி.க்கு அல்தாப் அளித்துள்ள பேட்டியில், 'மிகவும் வெளிப்படையான முறையில் சந்திப்பு நடந்தது. காஷ்மீர் களத்தில் நிஜமாக என்ன நடக்குமோ அதுகுறித்து பேசப்பட்டது' என்று தெரிவித்தார். கடந்த வாரம் அல்தாப், காஷ்மீர் கவர்னரை சந்தித்து பேசினார். அப்போது, அவரிடம் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. 

அமெரிக்கா, தென் கொரியா, மொராக்கோ, நைஜர், நைஜீரியா, கயானா, அர்ஜென்டினா, நார்வே, பிலிப்பைன்ஸ், மாலத்தீவு, வியட்நாம், வங்க தேசம், டோகோ, பிஜி, பெரு நாடுகளின் பிரதிநிதிகள் ஜம்மு காஷ்மீருக்கு சென்றனர். 

மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்கும் 2 நாட்கள் காஷ்மீர் சுற்றுலாவை ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரதிநிதிகள் புறக்கணித்துள்ளனர்.ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் முன்னேற்பாடுடன் கூடிய சுற்றுலாவை விரும்பவில்லை என்றும், காஷ்மீர் பயணம் பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டது. இதன் பின்னர் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் பிரதிநிதிகள் அக்டோபர் மாதம் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். அப்போது, காஷ்மீரின் கள நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டு மாநிலம் காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. 

அக்டோபர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலாவைப் போன்று தற்போதும் சுற்றுலா செல்ல மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்த சுற்றுலா நாளை தொடங்குகிறது. இதில் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, சில வளைகுடா நாடுகளின் பிரதிநிதிகள் இந்த சுற்றுலாவை தவிர்த்துள்ளனர். பயண ஏற்பாடு அட்டவணை இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 
 

திட்டமிடப்பட்ட முன்னேற்பாடுடன் கூடிய சுற்றுலாவை ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் விரும்பவில்லை என்றும், அவர்கள் காஷ்மீர் மக்களை சுதந்திரமான முறையில் தாங்கள் விரும்பிய வகையில் சந்திப்பதற்கு விருப்பம் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி முதல் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து பேசுவதற்கு ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் ஆர்வமாக உள்ளனர்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. 'ஜம்மு காஷ்மீரின் அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்திக்கும் வகையில் வெளிநாட்டு பிரதிநிதிகளின் பயணத்திட்டத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்' என்று தெரிவித்துள்ளார். 

.