This Article is From May 29, 2020

மகாராஷ்டிராவில் கொரோனாவால் ஒரேநாளில் 116 பேர் பலி! பாதிப்பு 62 ஆயிரத்தை தாண்டியது

நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் 2,098 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 2,682 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

மகாராஷ்டிராவில் கொரோனாவால் ஒரேநாளில் 116 பேர் பலி! பாதிப்பு 62 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் மூன்றில் ஒரு சதவீதம் மகாராஷ்டிராவில்தான் உள்ளது.

Mumbai:

கொரோனா பாதிப்புக்கு மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 116 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் 2,098 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 2,682 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் மூன்றில் ஒரு சதவீதம் மகாராஷ்டிராவில்தான் உள்ளது. அதிலும் குறிப்பாக மும்பையில் மட்டும் 36,932 பேருக்கு பாதிப்பு உள்ளது. மும்பையில் கொரோனா பாதிப்புக்கு 1,173 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மும்பையில் 1,447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் பலியாகியுள்ளனர். 

இருப்பினும், மாநிலத்தில் கொரோனா  பாதிப்பு இரு மடங்காக அதிகரிக்கும் நாட்கள் 15.7 ஆக குறைந்துள்ளது. கடந்த வார நிலவரப்படி 11 நாட்கள் பாதிப்பு இரு மடங்காக அதிகரித்தது. 
 

தமிழகத்தை பொருத்தளவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 874 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 618 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் 20,246 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று மட்டும் 11,334 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு அடைந்தோரில் 518 பேர் ஆண்கள். 356 பேர் பெண்கள் ஆவர்.

மாநிலம் முழுவதும் பரிசோதனை மையங்கள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 43 அரசு மற்றும் 28 தனியார் என 71 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 24 மணிநேரத்தில் 765 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் மொத்தம் 11,313 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

.