This Article is From Mar 15, 2019

உலக தூக்க தினம் 2019: ஆரோக்கியமான தூக்கம் உடல் எடையை குறைக்க உதவும் எப்படி தெரியுமா…?

World Sleep day 2019: தூக்கமின்மை பசியைத் தூண்டும் இரண்டு ஹார்மோன்களை தூண்டுகிறது. க்ரெலின் மற்றும் லெப்டின் ஆகியவை மூளையில் பசியுணர்வைத் தூண்டுகிறது.

உலக தூக்க தினம் 2019: ஆரோக்கியமான தூக்கம் உடல் எடையை குறைக்க உதவும் எப்படி தெரியுமா…?

World Sleep Day 2019: பெற்றேர்கள் குழந்தைகள் சரியான நேரத்தில் தூங்குவதை ஊக்குவிக்க வேண்டும்

ஹைலைட்ஸ்

  • ஒவ்வொரு வருடம் மார்ச் 15 உலக தூக்க தினமாக கொண்டாடப்படுகிறது.
  • குறைந்த பட்சம் 6 மணிநேரம் தூங்க வேண்டும்.
  • தூக்கமின்மை உடல் எடையை அதிகரிக்கும்.

இன்று மார்ச் 15 உலக தூக்க தினம், இந்த நாள் தூக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் போதுமான அளவு தூங்குவதில்லை. இதனால் உடல் மற்றும் மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுவதுடன் கல்வியிலும் முன்னேற்றம் தடைபடுகிறது. பெற்றோர்கள் குழந்தைகள் சரியான நேரத்தில் தூங்குவதை ஊக்குவித்து  குறிப்பிட்ட நேரத்தில் தூங்க வைப்பது மிகவும் அவசியம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

gotmo1fo

ஆரோக்கியமான உறக்கம் இல்லையென்றால் ஹார்ட் ஸ்ட்ரோக், இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை அதிகரிப்பு கூட ஏற்படலாம். ஆரோக்கியமான உறக்கம் இல்லையென்றால் நாள்பட்ட நோய்களை  அதிகமாக தூண்டி விடும்.  ஆரோக்கியமான தூக்கத்திற்கு சரியான டயட்டும் உடற்பயிற்சியும் முறையாக மேற்கொள்ள வேண்டும். சரியான தூக்கமின்மை உடல் எடை அதிகரிக்கும் எனப் பலரும் அறிந்து கொள்வதில்லை. சரியான தூக்கம் மன அழுத்தத்தையும் குறைக்கிறது. சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு அதிகப்படியான அளவு சாப்பிடுகின்றனர். 

தூக்கமின்மை பசியைத் தூண்டும் இரண்டு ஹார்மோன்களை தூண்டுகிறது. க்ரெலின் மற்றும் லெப்டின் ஆகியவை மூளையில் பசியுணர்வைத் தூண்டுகிறது. அழகான உணவின் போட்டோவைத் பார்த்தாலே பசி எடுக்கத் தோன்றி விடும். இந்த ஹார்மோன் வளர்சிதை மாற்ற விகிதத்தைக் குறைக்கிறது. உடலில் கொழுப்பை சேமிக்கிறது. லெப்டின் ஹார்மோன் கொழுப்பு உயிரணுக்களிலிருந்து வெளியிடப்படுகிறது. 

இதனால் பசியை உணர்வை மூளையில் வெளிப்படுத்துவதால் ஒவ்வொரு முறையும் பசியை விட அதிகளவு உணவு உண்பதை வழக்கமாக வைத்திருக்கும். ஆறுமணி நேரத்திற்கும் குறைவாக சாப்பிட்டால் லெப்டின் ஹார்மோன் குறைந்து கெர்லின் தூண்டப்படும். இதனால் பசியாக உணர்ந்தாலும் குறைவாக சாப்பிடுவீர்கள். குறைவான தூக்கம் எப்போதும் சாப்பிடாத உணவை சாப்பிடத் தூண்டும். ஜங்க் மற்றும் கொழுப்பு, பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளை  அதிகம் சாப்பிடத் தூண்டும். 

தூங்குவதற்கு முன் டிவி பார்ப்பதை தவிருங்கள்

தூங்குவதற்கு  முன் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பலரும் டிவி அல்லது திரைப்படம், மொபைல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் கண்டிப்புடன் இதில் செயல்பட்டு இரவு குறிப்பிட்டு நேரத்தில் தூங்குவதை உறுதிப்படுத்தவேண்டும். இரவு தூங்குவதற்கு முன் வெளிச்சமான திரைகளை கண்கள் பார்ப்பதால் உடனடியாக தூங்க முடியாது. கண்கள் சோர்வடைந்து தூக்கமின்றி இருப்பீர்கள் 

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

.