This Article is From Mar 14, 2019

உலக சிறுநீரக தினம் 2019: ஆரோக்கியமான சிறுநீரகம் ஏன் அவசியம்…? நிபுணர்கள் கூறும் விளக்கம்

World Kidney Day 2019: ஹார்மோன்கள் மற்றும் ஹீமோகுளோபின்கள் வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் உதவுகிறது. உடலிருந்து வெளியேறும் கிரியேடினைன், யூரிக் அமிலம், யூரியா ஆகிய ரசாயனங்களை வெளியேற்றுகிறது.

உலக சிறுநீரக தினம் 2019: ஆரோக்கியமான சிறுநீரகம் ஏன் அவசியம்…? நிபுணர்கள் கூறும் விளக்கம்

World Kidney day 2019: வளர்சிதை மாற்றம் மற்றும் ரசாயனங்கள் வெளியேற்றம்

ஹைலைட்ஸ்

  • சிறுநீரக நோயினால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இரத்த சிவப்பணு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • சிறுநீரகம் சேதமடைந்தால் கால்சியம் உறிஞ்சுதல் குறைப்புக்கு வழி வகுக்கிறது

மார்ச் 14 உலக சிறுநீரக தினமாக கொண்டாடப்படுகிறது. சிறுநீரக நோய்களுக்கான விழிப்புணர்வு, தடுப்பும் மற்றும் சிகிச்சை ஆகியவற்றிற்காக இந்த நாள் அர்பணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 850 மில்லியன் மக்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் சிறுநீரக தினத்தில், சிறுநீரக நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதை தடுக்கும் வழிகளை மேம்படுத்தவும் இந்த தினம் முக்கியத்துவம் படுத்தப்படுகிறது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், உடல் பருமன், எச்.ஐ.வி, மலேரியா, காசநோய் மற்றும் ஹெபடைடிஸ் போன்ற நோய்த்தாக்குதலினால் நீண்ட கால சிறுநீரக நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். 

1. சிறுநீரகத்தின் செயல்பாடுகள் 

தண்ணீர் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலை கட்டுப்பாடு சிறுநீரகத்தின் முக்கிய பணிகள் ஒன்று, திரவம் மற்றும் எலக்ட்ரோலைட்டை சமநிலையாக வைத்துக் கொள்வதாகும். இது சிறுநீரின் அளவு மற்றும் நுகர்வு ஆகியவற்றைக் கட்டுபடுத்துகிறது. இந்த மாற்றங்கள் அவசியமானவை ஏனெனில் உடல் திரவங்கள் ஒஸ்மோலரிட்ரி 300 மில்லியோசஸ்மோல்ஸ்/லிட்டர் இருக்க வேண்டும்.

எலக்ட்ரோலைட் சமநிலைக்கு மூன்று ஹார்மோன்கள் பொறுப்பாகிறது. முதலாவதாக ஆண்டிடில்யூரிடிக் ஹார்மோன் (Antidiuretic hormone), அல்டோஸ்டோரன் (Aldosterone),  அட்ரியல் நாட்யூர்டிக் பெப்டிட் (Atrial natriuretic peptide), ஆகிய ஹார்மோன்கள் செயல்பட உதவுகிறது. 

2. வளர்சிதை மாற்றம் மற்றும் ரசாயனங்கள் வெளியேற்றம் 

சிறுநீரகங்கள் உடலின் கழிவுகளை வெளியேற்றுவதிலும்  வளர்சிதை மாற்றத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஹார்மோன்கள் மற்றும் ஹீமோகுளோபின்கள் வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் உதவுகிறது. உடலிருந்து வெளியேறும் கிரியேடினைன், யூரிக் அமிலம், யூரியா ஆகிய ரசாயனங்களை வெளியேற்றுகிறது. 

3. இரத்த அழுத்தம் மற்றும் சோடியம் வெளியேற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது 

சிறுநீரகங்கள் நீர், சோடியம் மற்றும் ரெனின் என்ற என்சைம்களின் அமைப்பினை செயல்படுத்துகிறது. ரெனின் -ஆஞ்சியோடென்சின் (renin-angiotensin) அமைப்பு இரத்த அழுத்தம் மற்றும் திரவ சமநிலை ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது. சிறுநீரகங்க்ளில் உள்ள நரம்பியல் தமனி சார்ந்த அழுத்தம் விரைந்து கட்டுப்படுத்தக்கூடிய சேவையை செய்கிறது. சோடியம் வெளியேற்றத்திற்கு நீண்ட கால மிக முக்கிய பங்கினை ஆற்றுகிறது.

4. இரத்த சிவப்பணு உற்பத்தி ஒழுங்குமுறை 

இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி மற்றும் பிளாஸ்மாவின் அளவு ஆகியவற்றிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரகங்கள் இரத்தக் கூறுகளின் தொகுதிகளின்  கோளாறுகளை ஒழுங்கமைக்கின்றன.

5. விட்டமின் டி உற்பத்தியை ஒழுங்குபடுத்துதல்

சிறுநீரகம் விட்டமின் டி, கால்சிட் ரியால், ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. விட்டமின் உடலின் கால்சியம், பாஸ்பரஸ் அளவைக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரகம் சேதமடைந்தால் கால்சியம் உறிஞ்சுதல் குறைப்புக்கு வழி வகுக்கிறது. இதனால் எலும்பு கோளாறுகளுக்கு இட்டுச் செல்கிறது. 

6. அமில சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது  

சிறுநீரகம் சிறுநீரில் இருந்து ஹைட் ரஜன் அயனிகளை வெளியேற்றுகிறது. சிறுநீரில் இருந்து பைகார்பனேட் மற்றும் அமில அடிப்படை சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இரத்தத்தில் பி.ஹெச்சின் அளவு 7.35-7.45என்ற வரம்பிற்குள் பராமரிக்கப்பட வேண்டும். இந்தப் பணியை சிறுநீரகம் மட்டுமே செய்கிறது. 

7. குளுக்கோனிஜெனிசிஸ் (Gluconeogenesis)

புரதங்களின் அமினோ அமிலத்திலிருந்து புதிய குளுக்கோஸை உருவாக்கும் சுழற்சி குளுக்கோனிஜெனிசிஸ் வழியாகவே நடைபெறுகிறது.

சிறுநீரக பிரச்னைகளை ஆரம்ப கட்டத்திலே கண்டறிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான வசதிகளை அரசாங்கம் செய்து தர வேண்டும். பல்வேறு வகையான சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்த, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது மிகவும் முக்கியம். சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மில்லியன் கணக்கில் உள்ளனர். அவர்கள் இதனால் உடல் உறுப்புகளை இழக்கின்றனர். சிறுநீரகம் தொடர்பான சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Disclaimer: The opinions expressed within this article are the personal opinions of the author. NDTV is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of NDTV and NDTV does not assume any responsibility or liability for the same.

 

 

 

.