This Article is From Mar 14, 2019

உடல் எடையைக் குறைக்க உதவும் ஆரோக்கியமான லெமன் டிடாக்ஸ் டயட்

Weight loss tips: லெமன் டிடாக்ஸ் டயட் என்பது உடல் எடை குறைப்பிற்கு உதவக்கூடியது. எலுமிச்சை உடலில் உள்ள கசடுகளை வெளியேற்றுகிறது.

உடல் எடையைக் குறைக்க உதவும் ஆரோக்கியமான லெமன் டிடாக்ஸ் டயட்

Weight loss: விட்டமின் சி தோலில் உள்ள செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது

ஹைலைட்ஸ்

  • எலுமிச்சையில் சிட்ரஸ் சுவை கொண்டது
  • எலுமிச்சை கலந்த தண்ணீர் உடலுக்கு மிகவும் நல்லது.
  • எலுமிச்சை கலந்த தண்ணீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

உடல் எடை அதிகரிக்காமல் இருக்க அடிக்கடி உடல் எடையை சரிபார்த்து அதிகரித்து விட்டால் அதற்கேற்ப டயட்டை மாற்றிக் ஆரோக்கியமான உடல் எடை குறைப்பு செய்வது நலம். டயட்டில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது அதற்கு ஏற்றவகையில் உடற்பயிற்சியும் செய்வதும் அவசியம். உடல் எடையை குறைக்க எளிய ஒன்று உள்ளது. அதுதான் லெமன் டிடாக்ஸ் டயட். அதைப் பற்றித்தான் இதில் விரிவாக பார்க்க உள்ளோம். 

லெமன் டிடாக்ஸ் டயட் என்பது உடல் எடை குறைப்பிற்கு உதவக்கூடியது. எலுமிச்சை உடலில் உள்ள கசடுகளை வெளியேற்றுகிறது. நோயெதிர்ப்பு சக்தியை வலுவூட்டி உடலை நோய்களிடமிருந்து பாதுகாக்கிறது. உடலில் உள்ள கசடுகள் வெளியேறும் போது உடல் எடை குறைகிறது. இந்த டயட் கலோரிகள் அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கிறது. 

 

79qc3r0o

 

பொதுவாக எந்தவொரு டிடாக்ஸ் டயட்டும் இதை செய்வதில்லை லெமன் டிடாக்ஸ் டயட் கலோரி டயட்டாக செயல்பட்டு நீண்ட கால உடல் எடை குறைப்பிற்கு பயன்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர் நிமாமி அகர்வால் எலுமிச்சையில் அதிகளவு ஆண்டிபாக்ட்ரீயல் பண்புகள் உள்ளது. பிஎச் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. லெமனில் உள்ள சிட்ரிக் ஆசிட் கல்லீரலுக்கு மிகவும் நல்லது. உடலின் செயல் திறனை ஊக்குவிக்கிறது. தொடர்ச்சியாக லெமனை உணவில் எடுத்துக் கொள்ளும் போது ஒபிசிட்டி அளவைக் குறைக்கிறது என்று தெரிவிக்கிறார். 

 எலுமிச்சை இயற்கையின் அதிசயங்களில் ஒன்று. சிட்ரஸ் நிறைந்தது. விட்டமின் சி, ஏ, பி1,பி2, பி3 பி5, பி6 மற்றும் பி9, கால்சியம், மக்னீசியம், மாங்கனிசு, பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, கொலைன், பாஸ்பரஸ் மற்றும் கார்போஹைட் ரேட், சர்க்கரை ஆகிய அனைத்தும் உள்ளது. விட்டமின் சி  தோலில் உள்ள செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. 

இதனால் இதயநோய்கள் அல்லது சில வகையான புற்றுநோய் போன்ற நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது. எலுமிச்சையை நறுக்கி தண்ணீரில்  போட்டு அதனுடன் வெள்ளரி துண்டுகள், புதினா இலைகள் சேர்த்து அந்த தண்ணீரைக் குடிக்கலாம். இதனால் வளர்சிதைமாற்றம் அதிகரிக்கிறது. எலுமிச்சையை சாலட், சூப், பருப்பு வகைகள், ஆவியில் வேகவைத்த காய்கறிகள் மற்றும் சிக்கனுடன் சேர்த்துக் கொள்ளலாம். 

(Nmami Agarwal is nutritionist at Nmami Life)

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information. 

 

.