This Article is From Mar 08, 2019

மகளிர் தினத்தை கெளரவிக்கும் கூகுள் டூடுள்!

Womens day 2019: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

மகளிர் தினத்தை கெளரவிக்கும் கூகுள் டூடுள்!

தடைகள் பல தாண்டி சாதனை படைத்து வரும் ஒவ்வொரு பெண்ணையும் கொண்டாடும் வகையில் இந்த பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இப்படி பெண்களை கொண்டாட ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு தினங்கள் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், 1975-ம் ஆண்டு முதல் சர்வதேச பெண்கள் தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஐநா கொண்டாடி வருகிறது.

முக்கிய தினங்களை சிறப்பு டூடுள் மூலம் சிறப்பிப்பது கூகுளின் வழக்கம். அந்த வகையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சிறப்பு டூடுள் ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது. இன்றைய கூகுளில் உத்வேகம் அளிக்கும் 13 சர்வதேச பெண் பிரபலங்களை நினைவு கூறும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

இதில் அவர்களின் 13 மேற்கோள்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரியாக இருக்கும் பார்வையற்ற பெண் என்.எல்.பெனோ ஜெஃபைன் ஆகியோரின் சிந்தனை துளிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்கஉலக மகளிர் தினம்: காங்கிரஸ் கட்சி அறிவித்த போட்டி

.