தலை தூக்கும் மாட்டு இறைச்சி விவகாரம் : முஸ்லீம் தம்பதியினரை மரத்தில் கட்டி வைத்து அடித்த பசு குண்டர்கள்

Madhya Pradesh: ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்களையும் மரத்தில் கட்டி அடித்துள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
தலை தூக்கும் மாட்டு இறைச்சி விவகாரம் : முஸ்லீம் தம்பதியினரை மரத்தில் கட்டி வைத்து அடித்த பசு குண்டர்கள்

மாட்டுக் கறி வைத்திருந்ததாகக் கூறி முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்களை கட்டி மரத்தில் கட்டி போட்டு செருப்பினால் அடித்துள்ளனனர்.


Bhopal: 

மத்திய பிரதேசம் போபால் நகரில் மாட்டுக் கறி வைத்திருந்ததாகக் கூறி முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்களை கட்டி மரத்தில் கட்டி போட்டு செருப்பினால் அடித்துள்ளனனர். இந்த வீடியோ இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நபரினால் எடுக்கப்பட்டது.  ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்களையும் மரத்தில் கட்டி அடித்துள்ளனர்.

மரத்தில் கட்டி வைத்து தலையில் செருப்பால் அடித்தனர். அடிக்கும் நபர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் போட்டபடி அடித்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரினை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த சம்பவம் போபாலிலிருந்து 350 கி.மீ தொலைவில் உள்ள இடத்தில் நடைபெற்றது

8eel8d8g

சம்பவத்தை நேரில் பார்த்த எவரும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை.  இந்த சம்பவம் மே 22 அன்று நடந்துள்ளது. மறுநாள் ராம் சேனா அமைப்பில் உறுப்பினராக இருக்கும் சுபம் சிங் என்பவர் இந்த வீடியோவை ஃபேஸ் புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பின் அந்த பதிவை நீக்கியும் உள்ளார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டதாக லலித் சாக்கியவார் என்ற உள்ளூர் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................