ஆன்லைனில் ஆர்டர் பண்ணதுக்கு தண்டனையா... உணவில் 40 கரப்பான் பூச்சி... போதும்

அந்த உணவகத்தை உள்ளூர் உணவும் மற்றும் மருந்துகள் அமைப்பு விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளது

ஆன்லைனில் ஆர்டர் பண்ணதுக்கு தண்டனையா... உணவில் 40 கரப்பான் பூச்சி... போதும்

தனக்கு டெலிவரி செய்யப்பட்ட உணவில்  கிட்டத்தட்ட 40 கரப்பான் பூச்சிகளை எடுத்து டிஸ்யூ பேப்பரில் வைத்துள்ளார்

தென் சீனாவில் ஷாண்டோ நகரத்தில் பெண் ஒருவர் நண்பர்களுடன் இணைந்து இரவு உணவு சாப்பிடுவதற்காக வாத்து உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். 

தனக்கு டெலிவரி செய்யப்பட்ட உணவில்  கிட்டத்தட்ட 40 கரப்பான் பூச்சிகளை எடுத்து டிஸ்யூ பேப்பரில் வைத்துள்ளார். ஒவ்வொரு பூச்சியாக எடுத்து வைக்கும் காட்சியை நண்பர்கள் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். 

இதைகண்டு பலரும் அருவெறுப்பு உணர்வை அடைந்துள்ளனர்.. 

இது குறித்து மிரர் பத்திரிக்கை வெளியிட்ட தகவலின்படி, அந்த உணவகத்தை உள்ளூர் உணவும் மற்றும் மருந்துகள் அமைப்பு விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளது

 

Click for more trending news