This Article is From Apr 02, 2020

கதவைத் திறந்துப் பார்த்தால் 14 அடி பாம்பு; அலறிய பெண்… வைரலான புகைப்படங்கள்!!

மீட்கப்பட்ட அந்தப் பாம்பு, சம்பந்தப்பட்ட அரசு துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக சிஎன்என் செய்தி நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது. 

கதவைத் திறந்துப் பார்த்தால் 14 அடி பாம்பு; அலறிய பெண்… வைரலான புகைப்படங்கள்!!

80 கிலோவுக்கு மேலிருந்த அந்த பாம்பு, கொஞ்சம் சாந்தமான சுபாவம் கொண்டதாக இருந்த காரணத்தினால், பிரச்னையை சமாளிப்பது எளிதாக இருந்துள்ளது 

ஆஸ்திரேலியாவில் இருந்த ஒரு வயதான பெண்மணிக்கு, தன் வாழ்நாளில் ஏற்படாத அதிர்ச்சி, தன் வீட்டுக்குக் கதவைத் திறந்தபோது ஏற்பட்டுள்ளது. கதவுக்கு வெளியே, 14.8 அடி நீளமுள்ள பைத்தான் வகை பாம்பு சுருண்டு கிடந்துள்ளது. இதைப் பார்த்த அந்தப் பெண்ணுக்கு ஒரு கனம் இதயமே நின்றுவிட்டது. கதவை சட்டென்று மூடிவிட்டு உள்ளூர் பாம்பு பிடிக்கும் குழுவை அழைத்துப் பிரச்னையை சரி செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான படங்கள் தற்போது வைரல் ரகம். 

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்துப் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அழைப்பை ஏற்று சம்பவ இடத்துக்கு வந்த பாம்பு பிடிக்கும் நிபுணர், டோனி ஹாரிசன், தான் பார்த்ததிலேயே இதுதான் பெரிய பாம்பு என்று வாயடைத்துள்ளார். 

“என் 27 ஆண்டு பாம்பு பிடிக்கும் அனுபவத்தில் நான் பார்த்த மிகப் பெரிய பாம்பு இதுதான். இதைப் பார்த்த அந்த வயதானப் பெண் கண்டிப்பாக அலறியிருப்பார்,” என்று தி கார்டியன் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார் ஹாரிசன். 

80 கிலோவுக்கு மேலிருந்த அந்த பாம்பு, கொஞ்சம் சாந்தமான சுபாவம் கொண்டதாக இருந்த காரணத்தினால், பிரச்னையை சமாளிப்பது எளிதாக இருந்துள்ளது 

“இது ஒரு பர்மா வகை பைத்தான் பாம்பு. இதை சட்டத்துக்குப் புறம்பாக இங்கு வேறு யாரோ வைத்திருக்க வேண்டும். பிறந்ததிலிருந்து இந்தப் பாம்பு அவர்கள் பிடியில்தான் இருந்திருக்க வேண்டும்,” என்கிறார் ஹாரிசன். 

அவர், தனது முகநூலில் இது குறித்தப் படங்களையும் பகிர்ந்துள்ளார். 

“ஓ மை காட். அது மிகப் பெரியதாக உள்ளது. உங்கள் கதவைத் திறக்கும்போது இப்படியொரு பாம்பு இருந்தால் எப்படியிருக்கும்…” என்று போஸ்டுக்குக் கீழ் ஒருவர் கருத்திட்டுள்ளார். இன்னொருவர், “மிக அற்புதமாக உள்ளது இந்தப் பாம்பு,” என்கிறார். 

பர்மா பைத்தான் குறித்து ஹாரிசன், “இந்தப் பாம்பு, இங்குள்ள உயிரினங்கள் சாப்பிடும் உணவைச் சாப்பிடுகிறது. இது இங்குள்ள உரியினங்களுக்கு ஒருவகை சவால்தான் அது. அந்தப் பாம்பால் இங்கு வைரஸ் தொற்று கூட வரலாம்…” என எச்சரிக்கிறார். 

மீட்கப்பட்ட அந்தப் பாம்பு, சம்பந்தப்பட்ட அரசு துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக சிஎன்என் செய்தி நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது. 

Click for more trending news


.