This Article is From Apr 23, 2019

பிறந்து 3 நாளேயான நாய்குட்டிகளை வீசிச் சென்ற பெண் கைது : வீடியோ உள்ளே

தற்போது இந்த நாய்குட்டிகளை ஆரஞ்ச் கண்ட் ரி என்ற அமைப்பு பாதுகாத்து வருகிறது.

பிறந்து 3 நாளேயான நாய்குட்டிகளை வீசிச் சென்ற பெண் கைது : வீடியோ உள்ளே

பாதுகாப்புக்காக பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பெண்ணொருவர் நாய்க்குட்டிகளை வீசிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

கலிபோர்னியாவில்  பிறந்து 3 நாட்களே ஆன நாய்குட்டியை பாலித்தீன் கவரில் போட்டு குப்பைத் தொட்டியில் வீசிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த சம்பவம் கோசில்லா என்ற இடத்தில்  நடந்தது. பாதுகாப்புக்காக பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பெண்ணொருவர் நாய்க்குட்டிகளை வீசிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. 

அந்தப் பையில் 7 நாய்க்குட்டிகள் இருந்தது என்று ஃபாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது. அதன்பின் ஜான் என்பவர் அதைப் பார்த்து ரிவர்சைட் விலங்கின சேவை மையத்திற்கு அழைத்து அந்த நாய்களை ஒப்படைத்துள்ளார். தற்போது அந்தக் குட்டி நாய்கள் நலமாக உள்ளதென வீடியோ ஒன்றையும் ரிவர்சைட் விலங்கின சேவை மையம் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

இந்த சம்பவத்திற்குப் பின் அந்தப் பெண்ணை அடையாளம் கண்டுபிடித்து அவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.  

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் மனித நேயமற்ற செயல் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இன்று காலையில் இந்த வீடியோ காட்சிகள் வெளியானதுக்குப் பின் அந்த பெண் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. 

தற்போது இந்த நாய்குட்டிகளை ஆரஞ்ச் கண்ட் ரி என்ற அமைப்பு பாதுகாத்து வருகிறது. 

Click for more trending news


.