ஏன்பா.. ஒட்டகத்துக்குக் கூடவா போட்டோ எடுக்கிறது… அது பண்ண வேலையை பாருங்க - வைரல் வீடியோ!

யூ-டியூபில் பகிரப்பட்டதிலிருந்து 10,000 தடவைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது அந்த வீடியோ.

ஏன்பா.. ஒட்டகத்துக்குக் கூடவா போட்டோ எடுக்கிறது… அது பண்ண வேலையை பாருங்க - வைரல் வீடியோ!

இளம் ஜோடிகளின் போட்டோ ஷூட்-ஐ நடத்திக் கொடுத்த ‘அபரினா ஸ்டூடியோ’ இது குறித்த வீடியோவை தங்கள் யூ-டியூப் சேனலில் பகிர்ந்துள்ளனர்.

அமிஷ் மற்றும் மேக்னா என்னும் இளம் ஜோடி, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் திருமணம் செய்துள்ளனர். அவர்கள் திருமணம் செய்த இடத்திற்கு அருகில் நிறைய மிருகங்கள் வசிக்குமிடமும் இருந்துள்ளது. இதனால் ‘வெட்டிங் போட்டோ ஷூட்'-ஐ சற்று வித்தியாசமாகச் செய்யலாம் என்று நினைத்த ஜோடி, ஓட்டகம் ஒன்றுடன் போஸ் கொடுத்துள்ளனர். ஸ்டான்லி என்று பெயர் கொண்ட அந்த ஒட்டகம், பசியிலிருந்ததோ என்னவோ, மாப்பிள்ளை போட்டிருந்த தொப்பியைச் சாப்பிட முயன்றுள்ளது. இது குறித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. 

வீடியோவில், இளம் ஜோடி உற்சாகமாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்க, ஸ்டான்லி திடீரென்று குனிகிறது. நேராக மாப்பிள்ளை போட்டிருந்த தொப்பியை எடுக்க முயல்கிறது. அதைத் தடுக்க முயல்கிறார் மணப்பெண். அவரால் முடியாதபோது… வேறொருவர் தொப்பியைக் காப்பாற்றுகிறார். இன்னும் சில கணங்கள் கடந்திருந்தால் தொப்பி, ஸ்டான்லியின் உணவாக மாறியிருக்கக்கூடும். 

Newsbeep

இளம் ஜோடிகளின் போட்டோ ஷூட்-ஐ நடத்திக் கொடுத்த ‘அபரினா ஸ்டூடியோ' இது குறித்த வீடியோவை தங்கள் யூ-டியூப் சேனலில் பகிர்ந்துள்ளனர். “ஒட்டகத்துடன் நாங்கள் வித்தியாசமாகச் செய்த போட்டோ ஷூட்“ என்று வீடியோவுடன் பதிவிட்டுப் பகிர்ந்துள்ளனர். 

யூ-டியூபில் பகிரப்பட்டதிலிருந்து 10,000 தடவைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது அந்த வீடியோ. வீடியோவுக்கு ஒருவர், “இதுதான் பர்ஃபெக்ட் போட்டோ ஷூட்” என்கிறார். இன்னொருவரோ, “இதுவல்லவோ தங்கம்,” என கிண்டல் செய்கிறார். 

Click for more trending news