Read in English
This Article is From Oct 06, 2018

தற்கொலைக்கு தூண்டிய ஆதார் அட்டை பிழை!

ஆதார் பிழையினால் தன்னுடைய (EPF) பணியாளர் நிதியை எடுக்க முடியாமல் தவிப்பதாகவும் தற்கொலை செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் அந்த நபர் கூறினார்

Advertisement
இந்தியா

தன்னுடைய பணியாளர் நிதியை எடுக்க முடியாததால் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு வருவதாக அவர் கூறினார்

Mayurbhanj (Odisha):

ஒடிசா மின்சார துறையின் ஊழியர் ஒருவர் தன்னுடைய ஆதார் அட்டையில் இருக்கும் பழையின் காரணமாக பணியாளர் நிதியை எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு, தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் ஜெனா என்ற அந்த நபர் பரிபதா பகுதியின் மின்சார துறையில் கடந்த 30 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியும், பிறப்பு சான்றிதழில் உள்ள தேதியும் வேறுபட்டு உள்ளது.

தன்னுடைய குறைவான ஊதியத்தால் மகளுக்கு திருமணம் முடிக்க இயலவில்லை, மகனின் படிப்பிற்கு உதவ முடியவில்லை. இதனால் தான் தன்னுடைய பணியாளர் நிதியை எடுக்க முயன்றுள்ளதாகவும் ஆதார் அட்டையில் உள்ள குழுப்பத்தினால் அந்த பணத்தையும் எடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், தன்னுடைய குடும்பம் கடந்த ஒரு வருடமாக பணத்தட்டுப்பாட்டினால் மிகவும் சிரமப்பட்டு வருகிறது. தற்போது அரசாங்கமும், மாவட்ட அதிகாரிகளும் தனக்கு உதவ முன்வர வேண்டும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement