This Article is From May 13, 2019

"பெங்களூருக்கு வரவேற்கிறோம்"..: குமாரசாமியை கலாய்த்த பாஜக!

பெங்களூரு குண்ட்கோல் மற்றும் சின்சோலி சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக குமாரசாமி மே.13 மற்றும் 14 தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

உருக்குலைந்த பெங்களூரு உள்கட்டமைப்பை பாருங்கள் என குமாரசாமியை குறிப்பிட்டு பாஜக ட்விட் செய்துள்ளது.

Bengaluru:

கர்நாடகா முதல்வர் குமாரசாமி நட்சத்திர விடுதிகளில் தங்குவது குறித்து கடுமையாக விமர்சித்த பாஜக, பெங்களூரின் வறட்சி சூழ்நிலை மற்றும் உருக்குலைந்த நகரத்தின் உள்கட்டமைப்பையும் பார்க்க நேரம் ஒதுக்குங்கள் என்று குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக கொடகு மாவட்டத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த குமாரசாமி, அங்கு சில சிகிச்சைகளை பெற்றுவிட்டு, அங்குள்ள கோவில்களில் தரிசனம் செய்துவிட்டு திரும்பிய அவர் தற்போது, மீண்டும் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றுள்ளதை பாஜகவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இதுகுறித்து கர்நாடகா பாஜக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பெங்களூருக்கு குமாரசாமியை வரவேற்கிறோம், ரிசார்ட்டில் தங்கி உங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டுள்ளீர்கள் என்று நம்புகிறோம்.

அடுத்த என்ன?, வேறு எதேனும் ரிசார்ட்க்கு செல்வது குறித்து யோசனையா?, வெளிநாட்டு பயணமா?, அழுவீர்களா?, பாஜகவை குறைசொல்வீர்களா?

உங்கள் திட்டத்திற்கு இடையில் எதேனும் சில மணி நேரம் கிடைத்தால், பெங்களூரின் வறட்சி சூழ்நிலை மற்றும் உருக்குலைந்த நகரத்தின் உள்கட்டமைப்பையும் பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

பெங்களூரு குண்ட்கோல் மற்றும் சின்சோலி சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக குமாரசாமி மே.13 மற்றும் 14 தேதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதற்காக முதல்வர் குமாரசாமி, இன்று மாலை குண்ட்கோல் செல்கிறார், அங்கு காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்துவிட்டு, காலாபுராகி நோக்கி செல்கிறார். அங்கு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் சின்சோலி செல்கிறார். அங்கு தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்கிறார்.

இந்த தொகுதிகளில், ஜனதா தளத்திற்கு அதிக செல்வாக்கு கிடையாது. அதனால், வரும் மே.19 நடைபெற உள்ள தேர்தலுக்காக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர்களை இரண்டு தொகுதிகளிலும் ஆதரிக்கிறது.

சின்சோலி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ உமேஷ் ஜாதவ், காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவிற்கு சென்றதை தொடர்ந்து அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதேபோல், குண்ட்கோல் தொகுதியில் சிவாலி மரணமடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதியும் காலியாக அறிவிக்கப்பட்டது.

கர்நாடகாவில், மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிக்கும் கடந்த ஏப்.18 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுடன் சேர்த்து காலியாக உள்ள இரண்டு சட்டசபை தொகுதிக்குமான தேர்தலும் நடக்க உள்ளது.

.